அகமதாபாத் விமான விபத்து.. போஸ்ட்மார்ட்டத்தில் ஷாக்.. உடலை வாங்க போன குடும்பத்தினர் அதிர்ச்சி
அகமதாபாத்: அகமதாபாத் அரசு மருத்துவமனையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற முடியாமல் உறவினர்கள் மிகுந்த வேதனையுடன் காத்திருக்கின்றனர்.

விமான விபத்து: உடல்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள்
லண்டனில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, கடந்த வியாழக்கிழமை புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அகமதாபாத் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டுவரப்பட்டன. தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல பல பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்த குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றனர்.
சம்பவம் குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், உடற்கூறு ஆய்வை விரைந்து முடித்து, குடும்பத்தினரின் துயரைக் குறைக்கும் வகையில் 80 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஐந்து குடும்பத்தினரின் DNA மாதிரிகள் மட்டுமே ஒத்துப்போனதால், உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கின்றனர்.
சுரேஷ் பாய் பட்னி என்ற தந்தை கண்ணீருடன் தனது சோகத்தை விவரிக்கிறார். அவருடைய 15 வயது மகன் ஆகாஷ் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டான். அவருடைய மனைவி 50 சதவீத தீக்காயங்களுடன் பலியாகிவிட்டார். அவனுடைய உடல் எலும்புக் கூடாக மாறிவிட்டது. சில எலும்புகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. அது கூட எப்போது கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கதறுகிறார் பட்னி.
எட்டாம் வகுப்பு மாணவனான ஆகாஷ், மதிய உணவு கொடுப்பதற்காக தனது தாயார் நடத்தி வந்த டீ கடைக்கு வந்துள்ளான். மருத்துவக் கல்லூரிக்கு வெளியே இருந்த அவர்களின் டீக்கடையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு பகுதி சில மீட்டர் தூரத்தில் விழுந்தது. சுற்றி இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் தீப்பிழம்பு ஆகாஷை சூழ்ந்து கொண்டது. மகனைக் காப்பாற்ற முயன்ற சீதா பென் தீக்காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளானார்.
பிரல்ஹாத் பாய் என்பவர், தனது மனைவி மற்றும் மகள் ஆத்யாவை தேடி வியாழக்கிழமை இரவு முதல் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்குகிறார். "எனது மனைவி மருத்துவர் மெஸ்ஸில் ரொட்டி சுட்டுக்கொண்டு இருந்தார். ஆத்யாவும் அவளுடன் பணியாற்றி வந்தார். விமானம் மெஸ் மீது விழுந்ததில் இருந்து அவர்களைப் பற்றி எந்த செய்தியும் இல்லை" என்று பிரல்ஹாத் பாய் கூறுகிறார். மேலும், "நான் எனது இரத்த மாதிரியை இங்கு கொடுத்துள்ளேன். யாருடனாவது பொருந்தினால் என்னை அழைப்பதாக கூறி உள்ளனர் என்றுள்ளார்" என்றார்.
நேற்று அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். 241 பேர் இதில் பலியானார்கள். ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா உயிர் தப்பினார்.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்குச் சென்ற போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். இந்த விமானம் மருத்துவக் கல்லூரி அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், தரையில் இருந்த பலரும் உயிரிழந்தனர். இது இந்தியாவின் மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது வரை 240க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அகமதாபாத் மருத்துவமனையில், தங்கள் குடும்பத்தினரின் உடல்களைப் பெற முடியாமல், உறவினர்கள் மிகுந்த துயரத்துடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications