சில நாட்களில் ஓய்வு பெற வேண்டியவர்.. அகமதாபாத் விமானத்தை ஓட்டியது யார்? வெளியான சோக பின்னணி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் 12 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர். அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கனவுகளுடன் பணியாற்றிய அவர்களின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் கேப்டன் சுமீத் சபர்வால் விரைவில் ஓய்வு பெற வேண்டிய நிலையில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

விமானிகள் யார்?

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:39 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. புறப்பட்ட 8 நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் நிலை விமானி கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இருவருக்கும் சேர்த்து 9,300 மணி நேர விமான அனுபவம் உள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Ahmedabad Plane Crash

விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேர விமான அனுபவமும், துணை விமானி கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேர விமான அனுபவமும் இருப்பதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் நீண்ட அனுபவம் கொண்டவர்.

விமான விபத்தில் உயிரிழந்த விமானப் பணியாளர்கள்

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் கேப்டன் சுமீத் சபர்வால் (60), மூத்த ஊழியராக இருந்தார். நீண்ட காலமாக விமானியாகப் பணியாற்றிய அவர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறத் தயாராக இருந்தார். சுமீத் சபர்வால் அமைதியான, ஒழுக்கமான மனிதர் என்று அவரது அண்டை வீட்டார்கள் நினைவு கூர்ந்தனர். அவருக்கு டெல்லியில் ஒரு சகோதரி உள்ளார். இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த இழப்பு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏர் இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றியவர் தீபக் பதக். அர்ப்பணிப்புள்ள அவர், ஒவ்வொரு விமானப் பயணத்திற்கு முன்பும் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வியாழக்கிழமை அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். விபத்துக்குப் பிறகும், அவரது தொலைபேசிக்கு போன் சென்றுள்ளது.. போன் செய்து உள்ளது.. இதனால் அவரது குடும்பத்தினர் ஏதாவது அதிசயம் நடக்கும்.. எங்கள் மகள் போனை எடுப்பார் என்று நம்பினர். ஆனால், கடைசி வரை அந்த பெண் போனை எடுக்கவே இல்லை.

விபத்தில் உயிரிழந்த மற்ற விமானப் பணியாளர்கள்

35 வயதான சைனீதா சக்ரவர்த்தி, கோ ஏர் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு சமீபத்தில் ஏர் இந்தியாவில் பணிக்குச் சேர்ந்தார். "பிங்கி" என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர், ஜூஹு கோலிவாடாவில் வசித்து வந்தார். மைதிலி மோரேஷ்வர் பாட்டில் (24), குடும்பத்தில் மூத்த பெண். இவரின் சம்பளத்தை நம்பியே குடும்பம் உள்ளது. குடும்பத்தின் ஆதரவுடன், பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும் விமானப் படிப்பைத் தொடர்ந்து முடித்தார்.

ரோஷ்னி ராஜேந்திர சோங்கரே (27), டெல்லியில் வசித்து வந்தார். ஏர் இந்தியாவில் பணிக்குச் சேருவதற்கு முன், விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் கனவாக இருந்தது. ரோஷ்னியை, அவரது குடும்பத்தினர் புத்திசாலி மற்றும் ஊக்கமுள்ளவர் என்று விவரித்தனர். ரோஷ்னி சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். இன்ஸ்டாகிராமில் 54,000-க்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+