Ahmedabad plane crash: மிகப்பெரிய விமான விபத்து நடக்கப்போகுது.. ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரித்த ஜோதிடர்
அகமதாபாத்: 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விமான விபத்து ஏற்படும் என்று விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஜோதிடரின் அந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் நேற்று மதியம் 1:39 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. தீப்பிடித்து எரிந்த விமானத்தில் பயணித்த 230 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர். பல கனவுகளுடன் பயணித்த பயணிகளின் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி காண்போரின் கண்களை கலங்கச் செய்து வருகிறது.
இதற்கிடையே, இந்த விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் துல்லியமாக கணித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
Tata will make Rafale fuselage in Hyderabad. This is just aviation expansion, ISRO will surprise the world in Space and satellite engineering, space tourism in coming two years. Predicted this last year via Nakshatra transit. I am still holding high the prediction of Plane crash… https://t.co/WjX39R7E47
— Astro Sharmistha (@AstroSharmistha) June 5, 2025
இதுகுறித்து ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியுள்ளதாவது: ''2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்படும். மேலும், விமான விபத்து தொடர்பான தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும். இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்தேன்.
விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே சிறிது முன்னேற்றம் தொடங்கிவிட்டது. குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் ஆர்த்ராவின் மிதுனப் பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது, விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்'' என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து நடக்கும் என்று கூறிய மேற்கண்ட பதிவை சுட்டிக்காட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே (ஜூன் 5 ஆம் தேதி) மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ''டாடா நிறுவனம் ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடற்பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே ஆச்சரியப்படுத்தும். கடந்த ஆண்டு நட்சத்திரங்களின் நகர்தல் மூலம் இது கணிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று தெரிவித்திருந்தார்.
விமான விபத்து குறித்த இவரின் இந்த எக்ஸ் தளப் பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்தப் பதிவு குறித்து தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications