தென்காசி அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை.. போலீசார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பலபத்திரராமபுரம் குளக்கரை அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்து கிடப்பதாக ஊத்துமலை காவல் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்த தென்காசி துணை காவல் கண்கணிப்பாளர் (பொறுப்பு) மணி மாறன் தலைமையில் ஊத்துமலை காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் காஜா மைதின், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்

முதற்கட்ட விசாரணையில் பத்திரராமபுரம் குளக்கரையில் கொலை செய்யப்பட்டவர் சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை என்பவரது மகன் இளங்கோ வயது - 41 என்பது தெரியவந்தது. சென்னையில் ஆட்டோ ஒட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளர் என்பதும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்த வந்தவர் என தெரிய வந்துள்ளது.

ஊத்துமலை

ஊத்துமலை

இளங்கோவிற்கு திருமணமாகி மனைவி சங்கரன்கோவிலில் அரசு கலை கல்லூரியில் சமையலர் வேலை செய்து வருகிறார். எனவும் ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் தெரியவந்துள்ளது, இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

11ம் வகுப்பு மாணவி

11ம் வகுப்பு மாணவி

தாம்பரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பதினொராம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகரை சேர்ந்தவர் விஜயன் மேஸ்திரி வேலை செய்து வருகிறார் இவருடைய மனைவி கோமதி (33) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகள் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று மாணவியை சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கு காரணம்

தற்கொலைக்கு காரணம்

இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது அறைக்கு சென்றவர் அதிகாலை வரை கதவை திறக்காத்தால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது மாணவி கயிற்றால் தூக்கிட்டு தற்கலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து பீரகன்காரனை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+