சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த விவாதத்தில் அம்மா புராணம் பாடிய அதிமுக எம்.பி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தில் என்ன மாதிரி விஷயங்களை சேர்க்கலாம் என்று ஆலோசனை கூறுவதற்காக பல கட்சி எம்.பிக்களும் பேசிய நிலையில், அதிமுக எம்.பி மட்டும் அம்மா.. அம்மா.. என்று வரிக்கு வரி பேசிக்கொண்டிருந்தது சமூக வலைத்தளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா (உண்மையான பெயர் ஜோதி சிங்) 6 பேர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறார் குற்றவாளி ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

Aiadmk MPs repeatedly told the word Amma in Rajyasabha

கடந்த 20ம் தேதி தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு மாணவியின் பெற்றோர், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தற்போதுள்ள சிறார் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவனுக்கு இக்குற்றத்திற்காக 3 ஆண்டுகள்தான் அதிகபட்ச தண்டனை தர முடியும் என்று கூறியிருந்தது.

இந்த சூழலில் ராஜ்யசபாவில் இன்று பிற்பகல் சிறார் குற்றவாளிகள் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களை செய்யும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களை போலவே விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்க வகை செய்யப்படும். இதனால் சிறார் குற்றவாளிகளுக்கு ஆயுள் மற்றும் மரணதண்டனை வரை விதிக்க வாய்ப்புள்ளது.

இந்த சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என பல கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் பேசினர். அதிமுக சார்பிலும் நவநீத கிருஷ்ணன் எம்.பி பேசினார்.

சட்டம் பற்றிய பார்வையைவிட, தமிழகத்தில் ஜெயலலிதா அரசு குற்றதடுப்பு தொடர்பாக இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர்கள் கூறிக்கொண்டே இருந்தார். நிர்பயாவின் பெற்றோரும் ராஜ்யசபாவுக்கு வந்து பொதுமக்கள் மாடத்தில் இருந்து நடந்ததை பார்த்துக்கொண்டிருந்தனர். முக்கியமான சட்டம் என்பதால், தொலைக்காட்சி சேனல்களில் நாடு முழுவதிலும் பல மக்கள் விவாதத்தை நேரடியாக பார்த்தனர்.

ஆனால் அதிமுக எம்.பி வார்த்தைக்கு வார்த்தை, அம்மா.. அம்மா என்று கூறிக்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை பற்றி பேசியது, சமூக வலைத்தளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஹம்மா.. ஹம்மா என்று டிவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் அம்மா என்று கூறியதை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.

எந்த நேரத்தில் எதை பேசுவது என தெரியாமல் அதிமுக எம்.பி, பேசிக்கொண்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+