லேட் பண்ணாதீங்க… வியூகத்தை சொல்லுங்க… தலைமையிடம் கேட்ட ஜி.கே.வாசன்
டெல்லி: தமிழக தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை விரைவாக, முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து இதுவரை முடிவு எடுக்காத காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
லோக்சபா தேர்தலை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

தமிழக தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைமை நிர்வாகம் இதுவரை எந்த முடிவும் அறிவிக்கவில்லை, அதனால், தமிழகத்தில் கட்சி தேர்தல் பணிகள் தடைபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையின் இந்த நடவடிக்கையால் தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் வருத்தத்தில் இருப்பதாக கூறிய வாசன், இனியும் தாமதம் செய்யாமல் உடனே முடிவு எடுக்குமாறு தலைமையை கேட்டுக் கொண்டுள்ளதாக வாசன் தெரிவித்தார்.
மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தியதாக வாசன் கூறினார்.
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுப்பதுடன் அந்நாட்டு கடற்படையினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது என்று தாம் பிரதமரை வலியுறுத்தியாகவும் வாசன் கூறினார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications