சசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் 36 பேருக்கு எய்ட்ஸ்.. சோதனையில் அதிர்ச்சி தகவல்
சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் மாநில சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
சிறையில் உள்ள 4400 கைதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் முடிவில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

36 பேருக்கு எய்ட்ஸ்
சிறையில் உள்ள 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 12 கைதிகளுக்கு காசநோய் இருப்பதும், 60 கைதிகளுக்கு வலிப்பு நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதய நோய் பாதிப்பு
மேலும், 142 கைதிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஏராளமான கைதிகள் இதயம் தொடர்பான நோய்களும் ஏற்பட்டுள்ளன.

தனி சிறை
காசநோய் பிற கைதிகளுக்கு தொற்றாமல் தடுக்க காசநோய் பாதித்த 12 பேரும் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புள்ள கைதிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை குறித்து பதிவேடுகளில் பதியப்பட்டு வருகிறது.

டாக்டர்கள் பற்றாக்குறை
இந்த சிறையில் 4400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது மிக அதிக அளவாகும். இவ்வளவு பேருக்கு மூன்றே மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

விரைவில் மேம்படுத்த நடவடிக்கை
மூன்று டாக்டர்களால் இவ்வளவு கைதிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாத சூழல் பரப்பன அக்ரஹார சிறையில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை டிஐஜி ரூபா, பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள மருத்துவமனை விரைவில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications