எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டிலிருந்து தாவி ஓடிய எலி!
டெல்லி: டெல்லியில் உள்ள புகழ் பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டுக்குள்ளிருந்து உயிரு்டன் ஒரு எலி தாவிக் குதித்து ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதி நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட நாட்டின் முதன்மையான மருத்துவமனை டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையாகும்.

ஆனால் இங்கு சுகாதார சீர்கேடு மலிந்து வருவதாக சமீபகாலமாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதை நிரூபிப்பது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு நோயாளிகளுக்கு பிரெட், பிஸ்கட், பால் போன்றவை வழங்கப்படுகிறது. இதை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இந்த நிலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டை அவர் பிரித்தபோது அதற்குள்ளிருந்து ஒரு எலி தாவிக் குதித்து ஓடியுள்ளது. இதைப் பார்த்து அந்த நோயாளியும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அது பிரவுன் ஹை பைபர் பிரெட் ஆகும். இதை பான் நியூட்ரியன்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. எப்படி சீல் வைக்கப்பட்ட பாக்கெட்டிலிருந்து உயிருடன் எலி ஓடியது என்று தெரியவில்லை.
இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தகவல் இல்லை என்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மறுத்துள்ளார். ஆனால் நடந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு டாக்டரே கூறியுள்ளார். தற்போது அந்த பிரெட் கம்பெனிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை 3 வருட தடை விதித்துள்ளதாம்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications