மும்பையில் இருந்து புவனேஷ்வர் சென்ற விமானத்தில் திடீர் புகை.. பீதியடைந்த பயணிகள்
மும்பையில் இருந்து புவனேஸ்வர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
மும்பை: மும்பையில் இருந்து 155 பயணிகளுடன் புவனேஷ்வர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பையில் இருந்து புவனேஷ்வருக்கு 155 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. பிற்பகல் 2.15 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானி அறையில் இருந்து புகை வெளியானது. இதையடுத்து பயணிகளிடமும், கட்டுப்பாட்டு அறையிடமும் முழு அவசர நிலையை விமானக் குழுவினர் அறிவித்தனர்.
உடனடியாக விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானம் பரிசோதிக்கப்பட்ட பின்னர், முழு அவசர நிலை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
விமான என்ஜினியர்கள் விமானத்தில் புகை வெளியானதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் பத்திரமாக புவனேஷ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications