கடைசி வரை போராடிய விமானிகள்.. ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்தது எப்படி? நிபுணர்கள் சொன்ன தகவல்
அகமதாபாத்: குஜராத் அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 130க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் விமானிகள் கடைசி நொடி வரை போராடிய தகவலும், விமானத்தை இயக்கிய விமானிகள் குறித்த விவரமும் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து வானத்தை நோக்கி பறந்த இந்த விமானம் அடுத்த சில நிமிடங்கள் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்தில் அகமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளனது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். மொத்தம் 130க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த விமானம் வானில் 625 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதியதோடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே விமானம் வானில் பறந்து கீழே விழுந்து தீப்பிடித்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதற்கிடையே தான் கடைசி நொடி வரை விமானிகள் விபத்தில் சிக்காமல் அனைத்து பயணிகளையும் காப்பாற்ற முயன்ற தகவல் வெளியாகி உள்ளது. விமானம் விபத்தில் சிக்கிய வீடியோவை நன்கு உற்று கவனித்த நிபபுணர்கள் இதுபற்றி முக்கிய தகவலை கூறியுள்ளனர். விமானம் தாழ்வாக பறந்தபோது அதன் முன்புறமான மூக்கு பகுதி மேல்நோக்கியே இருந்தது. இதன்மூலம் விமானிகள் விமானத்தை மேல்நோக்கி இயக்குவதற்கு தொடர்ந்து முயற்சித்துள்ளது உறுதியாகி உள்ளது.
பொதுவாக விமானம் தரையில் இருந்து மேலே செல்லும்போது அதன் இறக்கைகள் சரியாக செயல்பட வேண்டும். விமானத்துக்கு தேவையான உந்துதல் தேவை. அப்போது தான் காற்றை கிழித்து கொண்டு குறிப்பிட்ட கோணத்தில் விமானம் எளிதாக வானில் மேல் நோக்கி செல்லும். ஆனால் சில சமயங்களில் ‛ஸ்டால்' (stall) எனப்படும் பிரச்சனை வரும். அதாவது விமானம் வானை நோக்கி மேலேழும்பி போதிய அளவுக்கு உந்து விசை விமானத்துக்கு வேண்டும். இந்த உந்துதலை விமானத்தின் இன்ஜின்கள் வழங்கும். இது கிடைக்காதபட்சத்தில் விமானத்தால் வானை நோக்கி பறக்க முடியாது.
இந்த விமானத்தில் ‛ஸ்டால்' பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை ஏற்படும்போது விமானம் தாழ்வாக பறந்து 100 அடியை எட்டியவுடன் வானில் இருந்து கல் போன்று கீழே விழும். இன்று விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தால் மேலேழும்ப முடியவில்லை. இதனை உணர்ந்த விமானிகள் விமானத்தை தொடர்ந்து வானை நோக்கி செலுத்த முயற்சி செய்துள்ளனர். இதற்காக உந்துதல் கொடுக்கும் வகையில் விமானிகள் செயல்பட்டுள்ளனர். ஆனால் விமானத்துக்கு தேவையான உந்துதல் கிடைக்காத நிலையில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது.
இருப்பினும் விமானத்தில் இன்ஜின் பிரச்சனை ஏற்பட்டதா? எதற்காக விமானத்தால் வானில் மேல்நோக்கி பறக்க முடியவில்லை என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுபற்றி விமான இயக்குநரகம் விசாரணையை தொடங்கி உள்ளது. விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபிசராக கிளைவ் குந்தார் ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் 2 பேரும் தான் விமானத்தை இயக்கிய விமானிகளாவார்கள். இதில் கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேர விமானம் ஓட்டிய அனுபவம் கொணடவர். துணை விமானியான கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர்.இவர்கள் 2 பேரும் விமானத்தை விபத்தில் சிக்காமல் இருக்க கடைசி நொடி வரை போராடியும் அது பலனளிக்கவில்லை என்று நிபுணர்கள் சோகமான விஷயத்தை தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications