ரூ.100 டிக்கெட்: முந்தியடித்த மக்கள், 'கிராஷ்' ஆன ஏர் இந்தியா 'வெப்சைட்'
டெல்லி: ஏர் இந்தியா தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்த சலுகை விலையிலான ரூ.100 டிக்கெட்டை பெற மக்கள் முந்தியடித்ததால் அந்நிறுவனத்தின் இணையதளம் செயல் இழந்தது.
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை

கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா ரூ.100க்கு விமான டிக்கெட் அளிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த ரூ.100 டிக்கெட் முன்பதிவு இன்றில் இருந்து 5 நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சலுகை விலையிலான டிக்கெட்டை பெற பொது
மக்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்றனர்.
இப்படி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முந்தியடித்ததால் ஏர் இந்தியா நிறுவன இணையதளம் கிராஷ் ஆனது.
இதனால் தற்போது டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஏர் இந்தியா இணையதளத்திற்கு சென்றால், அசௌகரியத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் முயற்சி செய்யும் பக்கம் இல்லை
என்று வருகிறது. இதனால் மக்கள் ரூ.100க்கு டிக்கெட் எடுக்க முடியாமல் போனதை நினைத்து கவலை அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications