என்னாது! மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய விமானம்.. பரபரப்பாக பார்த்த வாகன ஓட்டிகள்.. மேட்டர் இதுதான்
பாட்னா: பீகாரில் மேம்பாலத்திற்கு அடியில் விமானம் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் நீண்ட தொலைவுக்கு கடுமையான டிராபிக் ஜாமும் ஏற்பட்டது. பறந்து கொண்டிருந்த விமானம் மேம்பாலத்திற்குள் சிக்கிக்கொண்டதாக நினைக்க வேண்டாம். மேட்டரே வேற... அப்படி என்னதான் நடைபெற்றது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
சாலைகளில் அதிக பாரத்துடன் லாரிகள் அடிக்கடி மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளிவருவதை கேள்வி பட்டு இருப்போம். ஏன் சில நேரங்களில் ஆம்னி பேருந்துகள் கூட இப்படியாக சுரங்கப்பாதைகளிலோ.. மேம்பாலத்திற்கு கீழோ சிக்கியிருக்கின்றன. சென்னையில் கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கூட ஒரு ஆம்னி பேருந்து ரயில்வே சுரங்கப்பாதைக்கு கீழ் சிக்கிக் கொண்டு இருந்தது.

இதுமாதிரியான விபத்துக்களில் வாகனங்கள் சாலையில் சிக்குவது எல்லாம் பெரிய வியப்பேதும் இல்லை. ஆனால், விமானம் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்னங்க சொல்றீங்க என நினைக்க வேண்டாம். இது உண்மையிலேயே தான் நடந்துள்ளது. அதுவும் நம்ம இந்தியாவின் பீகாரில் தான் இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிக்கிக்கொண்ட விமானம்: பறந்து கொண்டிருந்த விமானம் மேம்பாலத்திற்குள் சிக்கிக்கொண்டதாக நினைக்க வேண்டும். மேட்டரே வேற... அப்படி என்னதான் நடைபெற்றது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். பயன்பாட்டுக்கு உதவாத பாடாவதியான விமானம் ஒன்று அசாமில் இருந்து மும்பைக்கு டிரக்கில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. சாலையில் விமானமே போவது போல பிரம்மாண்டமாக தெரிந்த இந்தக் காட்சியை வாகன ஓட்டிகள் பிரம்மிப்புடன் பார்த்து சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்: விமானத்துடன் சென்ற டிரக், மோதிஹாரி என்ற பகுதி அருகே மேம்பாலத்திற்கு கீழே செல்ல முற்பட்டது. அப்போதுதான் எதிர்பாராத விதமாக மேம்பாலத்திற்கு கீழ் விமானத்தின் பாகங்கள் இடித்தது. உடனடியாக டிரக் நிறுத்தப்பட்டது. டிரக் முன் பின் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. அதற்குள் சாலைகளில் நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அதன்பிறகு டிரக் டிரைவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சேர்ந்து பாலத்திற்கு அடியில் விமானத்துடன் சிக்கிக் கொண்ட டிரக்கை மீட்டனர். அதன்பின்னரே அங்கு போக்குவரத்து சீரானது. சாலையில் விமானம் சிக்கிக் கொண்டது போன்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
டிரெண்ட் ஆகும் வீடியோ: விமானம் சிக்கிக் கொண்ட போது வாகன ஓட்டிகளும் ஒரு நிமிடம் திகைத்து போயினர். பின்னர் கண்களை கசக்கி உற்று பார்த்த போதுதான் உண்மை தெரியவந்தது. தற்போது விமானம் சாலையில் நிற்பது போன்ற படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திராவில் இதேபோன்ற நிகழ்வு நடைபெற்றது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஐதரபாத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று ஆந்திராவின் பபட்லா மாவட்டத்தில் மேம்பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. அப்போதும் இந்த செய்தி வைரலானது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications