பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள்... வன்முறைகளுக்காகவே வளர்க்கப்படும் அகோரிகளின் அகாடாக்கள்!
அகோரிகளை உள்ளடக்கிய அகாடாக்கள்தான் இந்துத்துவாவின் பெயரிலான வன்முறைகளுக்கு காரணமானவர்கள்.
வாரணாசி: வட இந்தியர்களால் பய பக்தியுடன் வணங்கப்படுகிறவர்கள் மனித மாமிசம் சாப்பிடும் அகோரி சாமியார்கள்.. மண்டையோடுடன் முழு நிர்வாணமாக கங்கை நதிக்கரைகளில் சுதந்திரமாக நடமாடும் இவர்கள் தனி மனிதர்கள் அல்ல.. இந்துத்துவா சக்திகளின் வலிமை வாய்ந்த போர் பாசறைகளாக இருப்பவை அகாடாக்கள் எனப்படும் சாதுக்களின் சங்கமம்தான்.
இந்துத்துவா அமைப்புகள் எத்தனையோ முகங்களுடன் வட இந்தியாவில் வலிமையாக இருக்கின்றன. இவர்களில் சாதுக்களுக்கான ஒருங்கிணைந்த சங்கங்கள்தான் அகாடாக்கள் எனப்படுபவை.
ஹரித்துவாரில் திரும்பிய திசையெங்கும் பிரமாண்ட அகாடாக்களைப் பார்க்க முடியும். கும்பமேளா காலங்களிலும் சிவராத்திரி காலங்களிலும் இந்த அகாடாக்களைச் சேர்ந்த சாதுக்கள்தான் நிர்வாண ஊர்வலம் நடத்துவார்கள்.

நிர்வாண சாதுக்கள்
நிர்வாண ஊர்வலம் நடத்த வரும் சாதுக்களுக்காக அகாடாக்களில் ஏசி அறைகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கும். இந்த அகாடாக்களுக்கு நிதி கொடுப்பவர்கள் யார்? இந்த அகாடாக்களுக்கான வருமானம் என்ன? அகாடாக்களுக்கான கணக்கு வழக்கு எதுவும் ஆய்வுக்குட்பட்டதே இல்லை. எவரும் இந்த அகாடாக்களை கேள்வி கேட்க முடியாது. இதுதான் காங்கிரஸ் ஆட்சியிலும் பாஜக ஆட்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது.

மகா மண்டலேஸ்வரர்கள்
இதியாவில் பிரதான 13 அகாடாக்கள் (இவற்றில் உட்பிரிவு வேறு) எனப்படும் சாதுக்களின் சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்களின் தலைவர்கள் மகா மண்டலேஸ்வர்கள் எனப்படுவர். அனைத்து அகாடாக்களின் மகா மண்டலேஸ்வர்களை ஆலோசித்துதான் கும்பமேளா நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கும்பமேளா காலங்களில் ஒவ்வொரு அகாடா சாதுக்களுக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அகாடாக்களுக்கு ஒதுக்கீடு
ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹரித்துவார் கும்பமேளாவில் நிர்வாண ஊர்வலம் நடத்திய போது யார் முதலில் புனித நீராடுவது என்பதில் சாதுக்களிடையே மோதல் வெடித்து 100-க்கும் மேற்பட்டோர் அடித்து கொல்லப்பட்டனர். இதனால் ஒவ்வொரு அகாடாக்களுக்கும் ஒரு நாள் என பிரித்து கொடுக்கப்படும். புனித நீராடுவதற்கு முன்னதாக அத்தனை அகாடா சாதுக்களும் நிர்வாணமாக ஊர்வலம் நடத்துவர். ஆண் உறுப்புகளில் கத்தியை சொருகியபடி சாகசங்களை செய்து காட்டுவர். இந்த அகாடாக்களில் சேரும் போது உடலுறவு உணர்ச்சிகளைத் தூண்டுகிற நரம்புகளை கைகளாலேயே 'கட்' செய்துவிடுவர். இதில் உயிரிழந்தவர்களும் உண்டு.

நித்தியானந்தா தலைவர்
அகாடாக்கள் அனைத்திலும் தாரளமாக புழங்குவது கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள். பகிரங்கமாக கங்கை நதிக்கரைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புகைத்தபடியே அமர்ந்திருப்பர் இந்த அகாடா சாதுக்கள். இவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது என நினைப்பவர்கள் வட இந்தியர்கள். இந்த அகாடாக்களில் ஒன்று மகா நிர்வாணி அகாடா. இதில் உள்ளவர்கள்தான் அகோரிகளாக எப்போதும் நிர்வாண கோலத்தில் அலைபவர்கள். மனித மாமிசம் சாப்பிடக் கூடியவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகா நிர்வாணி அகாடாவின் மகா மண்டலேஸ்வராக முடிசூட்டிக் கொண்டவர் சாட்சாத் சர்ச்சைக்குரிய நித்தியானந்தாதான்.

பாபர் மசூதி இடிப்பு
இந்த அகாடா சாதுக்கள்தான் 2002-ல் குஜராத்தில் கொடூரமான படுகொலைகளை அரங்கேற்றியவர்கள். அகாடா சாதுக்களுக்கும் குஜராத் வன்முறைகளுக்குமான தொடர்புகளைப் பற்றி எவருமே பேசவில்லை. இந்த அகாடா சாதுக்கள்தான் பாபர் மசூதியை இடித்தவர்களும் கூட. அரசியல் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே இத்தகைய சம்பவங்களில் அடிபடுகின்றனவே தவிர அகாடாக்களின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது. சனாதான இந்து தர்மத்தைப் பாதுகாக்க சர்வபரி தியாகத்துக்கும் தயாரானவர்களாக அகாடாக்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றனர் சாதுக்கள். சாதுக்கங்களின் சங்கங்களான அகாடாக்கள் பற்றி விவாதங்கள் காலந்தோறும் மறைக்கப்பட்டு வருவதால்தான் இந்துத்துவா சக்திகள் வேர்பிடித்து விஸ்வரூபம் காட்டுகின்றன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications