ராமர் கோயில் கட்ட வலியுறுத்தும் வி.ஹெச்.பி.யின் 'சங்கல்ப் திவாஸு'க்கு உ.பி. அரசு தடை
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்த திட்டமிட்டிருந்த 'சங்கல்ப் திவாஸ்' கூட்டத்துக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு தடை விதித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க ராமர் கோயில் விவகாரமும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதனால் உத்தரப்பிரதேச மாநிலம் தொடர்ந்தும் பதற்றத்தில் இருந்து வருகிறது.
அண்மையில்கூட முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 49 பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 18-ந் தேதியன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தி 'சங்கல்ப் திவாஸ்' கூட்டத்துக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் இதற்கு நேற்று மாநில அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து பைசாபாத் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஸ்வ ஹிந்து பரிஷத்தின் யாத்திரை ஒன்றுக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications