ரம்ஜான் தொழுகையில் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ளாதது ஏன்? அகிலேஷ் யாதவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடந்த ரம்ஜான் தொழுகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

Akhilesh Yadav question why Yogi adityanath did not visit Eidgah

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், முன்னாள் முதல்வரான நான் இந்த தொழுகையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், இப்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஏன் கலந்து கொள்ளவில்லை? இதற்கு அவர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். காஷ்மீரில் நடந்து வரும் கலவரங்களை மத்திய அரசு விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SP leader and former chief minister Akhilesh Yadav today took a swipe at Chief Minister Yogi Adityanath for not visiting the eidgah.
Please Wait while comments are loading...