For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் காலூன்றுகிறதா அல்கொய்தா பயங்கரவாத இயக்கம்? திடுக் தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் காலூன்றுவதாக உளவுத்துறை துறை அதிகாரிகள் திடுக் தகவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

  • காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்ட போது இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா இயக்கம் தமிழில் 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
  • தமிழில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் தென்னிந்தியாவை அல்கொய்தா இலக்கு வைத்திருப்பது உறுதியாகி உள்ளது.
Al-Qaeda- First a message in Tamil and now a hiring desk at Tamil Nadu
  • தென்னிந்தியாவில் காலூன்ற பல இடங்களில் முயற்சித்தும் அல்கொய்தாவால் முடியாமல் போனது.
  • தற்போது அல்கொய்தா, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அல் உம்மாவுடன் இணைந்து காலூன்ற முயற்சிக்கிறது.
  • அல் உம்மா இயக்கத்தினர் மீது கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் 3 நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது.
  • இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள், அல் உம்மா இயக்கத்தினர் ஒசாமா பின்லேடனுக்கு விசுவாசியாக இருந்தனர்.
  • இந்திய துணைக்கண்டத்துக்கான அல் கொய்தா இயக்கத்தை அமைப்பதில் அல் உம்மாவினர் உதவியாக இருந்தனர் என தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்துக்கான பிரதிநிதிகளை அல்கொய்தா ஏற்கனவே நியமித்திருக்கிறதாம்.
  • தமிழகத்தில் அல்கொய்தா இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு இந்தோனேசியாவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • இந்தோனேசியாவில் லஷ்கர் இ தொய்பா வலுவாக காலூன்றி இருக்கிறது. அந்த இயக்கத்தின் உதவியை அல்கொய்தா கோரியுள்ளது.
  • அல் உம்மா இயக்கம்தான் பெங்களூரு மல்லேஸ்வரம் பாஜக அலுவலக குண்டுவெடிப்பை நிகழ்த்தியது.
  • இதேபோல் கொல்லம், மைசூரு நீதிமன்றங்களுக்கு வெளியே குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியதும் அல் உம்மாதான்.

இவ்வாறு உளவுத்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

English summary
When the al-Qaeda in the sub-continent or the AQIS released a three page note in Tamil in the aftermath of the Burhan Wani killing, there was a message to South India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X