அல் கொய்தா இந்திய கிளையின் தலைவர் ஒரு இந்தியர்: பிரபல பாக். பத்திரிக்கையாளர் 'குண்டு'
டெல்லி: அல் கொய்தா அமைப்பின் இந்தியா கிளையின் தலைவரான ஆசிம் உமர் ஒரு இந்தியர் என பிரபல பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்தியா கிளையின் தலைவர் ஆசிம் உமர். ஷேக் உமர் என்றும் அழைக்கப்படும் அவர் ஒரு இந்தியர் என பிரபல பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் ஹமீது மிர் தெரிவித்துள்ளார். மேலும் உமரை கடந்த 2005 மற்றும் 2007ம் ஆண்டில் தான் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிம் உமர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை மத்திய உளவுத் துறை உறுதி செய்துள்ளது.

உத்தர பிரதேசம்
ஆசிம் உமர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் இந்தியர் தான் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று உளவுத் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
உமர் 1989ம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கு வருவதும், போவதுமாக உள்ளார். அவர் இந்தியாவில் இருக்கையில் சிமி ஆட்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். 1995ம் ஆண்டில் தான் அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் செட்டிலாவது என்று முடிவு செய்துள்ளார். அவர் கராச்சியில் உள்ள ஜாமியா உலூம் இ இஸ்லாமியா பள்ளியில் படித்தவர்.
ஹர்கத்துல் முஜாஹிதீன்
உமர் முதன்முதலில் ஹர்கத்துல் முஜாஹிதீன் அமைப்பில் தான் சேர்ந்துள்ளார். அவரது வேகம், ஈடுபாட்டை பார்த்து தான் அல் கொய்தா அவரை தங்கள் அமைப்பில் சேர்த்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையால் தான் அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அல் கொய்தா
அல் கொய்தாவில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டம் பற்றி போதித்து பல இளைஞர்களை அமைப்பில் சேர்ப்பது தான் உமரின் வேலையாக இருந்தது.
சிமி
உமர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மாறி மாறி இருந்தாலும் இந்தியாவில் உள்ள சிமி அமைப்புடன் தொடர்பில் உள்ளார். தான் ஒரு அல் கொய்தா தலைவருடன் தொடர்பில் இருப்பதாக சிமி தலைவர் சப்தர் நாகூரி தெரிவித்துள்ளார். அவர் தொடர்பில் இருக்கும் அந்த தலைவர் உமர் என்று உளவுத் துறை சந்தேகிக்கிறது.
விசாரணை
பாட்னா குண்டுவெடிப்பில் கைதான ஹைதர் அலியும், சிமி தலைவர் நாகூரியும் கூறுகையில், தாங்கள் தொடர்பில் இருக்கும் அல் கொய்தா தலைவர் இந்தியர்களை போன்று உருது மொழி பேசுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications