விசாகப்பட்டினத்தில் காணாமல் போகும் சிறுவர்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்
விசாகப்பட்டினம்: காணாமற்போகும் சிறுவயதினரின் எண்ணிக்கை சமீபகாலங்களில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் பணிபுரிந்துவரும் குழந்தை பாதுகாப்புப் பிரிவின் மூலம் சேகரிக்கப்பட்ட கணக்கீடானது கடந்த 2011-12-ம் ஆண்டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 பேர் காணாமற் போயிருந்ததாகக் குறிப்பிடுகின்றது. அதன்பின் கடந்த ஆண்டு இதே எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.
விடுபட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கங்களைத் தொட்டுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போவோர்
இந்த நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை 24 பேர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கும் இந்த அமைப்பு மொத்த எண்ணிக்கையை 77 என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம் பெறப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையிடமிருந்து
காணாமல் போனவர்கள் பற்றி காவல்துறையினரிடமிருந்து தகவல் பெறப்பட்டால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டப்படி காவல்துறை ஒவ்வொரு மாதமும் இதுகுறித்த புள்ளி விவரங்கள், தரவுகளை எங்களுக்கு அறிவித்தல் வேண்டும். ஆனால் இது நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை.

அறிவிப்புகள் இல்லை
காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும்போதும் எங்களிடம் தகவல் அளிக்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சேர்க்கப்படுகின்றனர். குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகளின் அறிவிப்புப் பலகைகளும் காவல் நிலையங்களில் வைக்கப்படுவதில்லை.

இணையதளத்தில் பராமறிப்பு
காணாமற்போகும் குழந்தைகள் குறித்த அனைத்து விவரங்களும் டிசிபியு மற்றும் சிடபிள்யுசி அமைப்புகளுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும் என்று மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி ஏ.சத்யநாராயணா கூறியுள்ளார். மேலும், டிசிபியு அலுவலக அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் இந்தக் குழந்தைகளின் அனைத்துத் தகவல்களையும் தங்களின் டிராக் சைல்ட் இணையதளத்தில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications