"லிவ்-இன் உறவு குற்றமல்ல.." இளம் ஜோடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
காந்திநகர்: லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமானது இல்லை என தீர்ப்பளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் குடும்ப அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட 12 பெண்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. லிவ்-இன் உறவுகள் அனைவராலும் ஏற்ற கொள்ள முடியாது என்பதற்காகவே அதைச் சட்டவிரோதமாக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் லிவ் இன் உறவில் வாழும் கலாச்சாரம் இப்போது பரவலாக அதிகரித்துள்ளது. இருப்பினும், லிவ் இன் உறவை இந்தியச் சமூகம் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை. இதனால் லிவ் இன் உறவில் வாழ்பவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படித் தான் லிவ்-இன் உறவுகளில் இருக்கும் 12 பெண்கள் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

லிவ் இன் உறவு
இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங், திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது குற்றமல்ல எனத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை அதிகாரிகள், இந்தத் தம்பதிகளின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு செய்யாமல், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து நீதிபதி மேலும் கூறுகையில், "மனித வாழ்வுக்கான உரிமை தான் இங்கு மிகவும் உயர்ந்தது.. ஒருவன் மைனர் அல்லது மேஜர், திருமணமானவர் அல்லது திருமணமாகாதவர் என எப்படி இருந்தாலும் வாழ்வதற்கான உரிமையே அடிப்படையானது. மனுதாரர்கள் திருமணம் செய்யவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது" என்றார்.
பின்னணி
குடும்பத்தினர் மிரட்டுவதால் தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என போலீஸ் நிலையத்தை அணுகியதாகவும் இருப்பினும் தங்களைப் புகார்களை போலீசார் ஏற்கவில்லை என அந்த ஜோடிகள் கூறியிருந்தனர். அதற்காகவே திருமணமாகவில்லை என்பதற்காக அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், 18 வயதைக் கடந்தவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இணைந்து வாழும்போது, தேவைப்பட்டால் போலீசார் உடனடியாகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
தவறு இல்லை
பாதுகாப்பு கோரிய மனுவை ஏற்ற ஐகோர்ட், "மனுதாரர்கள் அனைவரும் 18 வயதைத் தாண்டிய மேஜர்கள்.. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்கள். அது சரியா தவறா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றத்தில் வேலை இல்லை. மனுதாரர்கள் எந்தவொரு தவறும் செய்யாத போது, அவர்களின் பாதுகாப்பு கோரிக்கையை ஏற்காமல் இருக்க எந்தக் காரணமும் தெரியவில்லை. மனுதாரர்கள் அமைதியாக ஒன்றாக வாழ உரிமை உண்டு. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரர்கள் தங்கள் வயதை உறுதி செய்யச் சட்ட ரீதியான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவர்கள் மேஜர் என்பது உறுதியானால்.. அவர்கள் லிவ்-இன் உறவில் இருப்பதற்கு எதிராக போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர்களின் வயதை உறுதி செய்ய ஆவணம் இல்லை என்றால் அவர்களின் வயதை உறுதிப்படுத்த, எலும்பு உறுதி பரிசோதனை உட்படச் சட்டப்பூர்வ நடைமுறைகளை போலீசார் பின்பற்றலாம்.
மேற்கத்திய கலாச்சாரம்
லிவ்-இன் உறவுகள் நாட்டில் சமூக ரீதியாக இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தடை செய்யப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. பல மேற்கத்திய நாடுகளின் ஐடியாக்கள் இந்தியாவுக்குள் வருகிறது. லிவ்-இன் உறவு என்பது அதுபோல ஒன்று தான். அதேநேரம் இன்றும் இது சரியா தவறா என்ற விவாதம் நடந்து கொண்டே இறுக்கிது. சிலருக்கு இது ஒழுக்கக்கேடாகத் தோன்றலாம்.. மற்றவர்களுக்கு இணைந்து வாழ ஒரு வழி அவ்வளவே!" என்றார்.












Click it and Unblock the Notifications