தப்பிச்சென்ற விஜய் மல்லையாவுடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்
ஹைதராபாத்: நாட்டை விட்டு தப்பித்து சென்ற விஜய் மல்லையாவுடன் செல்பி எடுத்து, சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் டோலிவுட் நடிகர் அல்லரி நரேஷ்.
17 வங்கிகளிடம் வாங்கிய 9௦௦௦ கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாமல் நாட்டை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லையா.
இவர் இந்தியாவை விட்டு தப்பி சென்று லண்டனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.
Bankulaku dorakani vijay malya naa selfie ki chikkadu. Enjoy his last selfie while in india! pic.twitter.com/4m0WEMqzlo
— Allari Naresh (@allarinaresh) 12 March 2016
இந்நிலையில் தப்பிச்சென்ற விஜய் மல்லையாவுடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் டோலிவுட் நடிகர் அல்லரி நரேஷ்.
இந்த செல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கும் அல்லரி நரேஷ் " பல வங்கிகளால் தேடப்பட்டு வரும் விஜய் மல்லையாவுடன் நான் எடுத்துக் கொண்ட செல்பி.
அநேகமாக இதுதான் இந்தியாவில் அவர் எடுத்துக் கொண்ட கடைசி செல்பி என நினைக்கிறேன். ரசித்து மகிழுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
அல்லரி நரேஷ் பதிவிட்ட இப்புகைப்படம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அல்லரி நரேஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் செல்பி எனவும், அதனால் தான் இப்படி அவர் விளம்பரம் தேடுவதாகவும் டோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
தமிழில் குறும்பு மற்றும் போராளி ஆகிய படங்களில் அல்லரி நரேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications