இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளிய காமுகன்: 15 மணி நேரத்திற்கு பின் மீட்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வயல்காட்டிற்குச் சென்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடிய விடிய கிணற்றுக்குள் போராடிய பெண்ணை 15 மணிநேரம் கழித்து மீட்டுள்ளனர்.
பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார். காட்டுப் பகுதியில் அந்த பெண்ணை மிரட்டி அவர் பலாத்காரம் செய்துவிட்டு வயல்வெளியில் இருந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டு ஒடிட்டான்.
கிணற்றுக்குள் விழுந்த அந்த பெண் உதவி கோரி கத்தி கூச்சலிட்டாள். அப்போது பலத்த மழை பெய்ததால் அவள் குரல் வெளியில் கேட்கவில்லை. மழையில் நனைந்து கொண்டே இரவு முழுக்க அந்த பெண் கிணற்றுக்குள் இருந்த பம்புசெட் குழாயை பிடித்தபடி போராடினாள்.
காலையில்தான் அவள் குரல் கேட்டு வயல் வேலைக்கு வந்த விவசாயிகளுக்குக் கேட்டது. அவர்கள் ஓடி வந்து கிணற்றுக்குள் இருந்த பெண்ணை மீட்டனர்.
சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications