தலித் என்பதால் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறிய ஐஏஎஸ் அதிகாரி
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தான் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழக தலைவராக இருப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உம்ரா சலோதியா. அவர் தான் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறியதுடன், விருப்ப ஓய்வும் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழக தலைவராகவும், கூடுதலை தலைமைச் செயலாளராகவும் உள்ளேன். தலைமைச் செயலாளர் பதவிக்கு நான் தகுதியுடையவன். அப்படி இருக்கையில் தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜனின் பதவிக்காலத்தை மாநில அரசு 3 மாதங்கள் நீட்டித்துள்ளது.
எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்பதால் தலைமைச் செயலாளர் பொறுப்பை பெற எனக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் என்னை ஒதுக்குவதாக உணர்கிறேன். அதனால் விருப்ப ஓய்வு கேட்டு மாநில அரசுக்கு 3 மாத நோட்டீஸ் அளித்துள்ளேன். இது குறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். எப்படி இருந்தாலும் ஜூன் மாதத்தில் நான் ஓய்வு பெறுகிறேன்.
இந்துவாகவும், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவனாக இருந்ததாலும் ஒதுக்கப்பட்டேன். அதனால் நான் பள்ளிவாசலில் கலிமா கூறி இஸ்லாத்திற்கு மாறிவிட்டேன். இனி என்னை உம்ரா கான் என்று அழைக்க வேண்டும். என் குடும்பத்தார் யாரும் மதம் மாறவில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications