பழங்குடி மக்களின் கல்விக்காக பாடுபடும் கேஐஐடி நிறுவனர் அச்சுதா சமந்தாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
புவனேஸ்வர்: பழங்குடி மக்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி (கேஐஐடி) நிறுவனர் அச்சுதா சமந்தாவுக்கு 64-வது கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
கேஐஐடி, கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (கேஐஎஸ்எஸ்) போன்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நிறுவி கல்விச் சேவையாற்றி வருகிறார் அச்சுதா சமந்தா. இன்ஸ்டிடியூட்டின் தலைவராகவும், நிறுவனராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை இலவச கல்வியை அளித்து சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இது அவருக்குக் கிடைத்துள்ள 64-வது கவுரவ டாக்டர் பட்டமாகும். பெங்களூரு நகரில் நடைபெற்ற அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் அச்சுதா சமந்தாவுக்கு வழங்கப்பட்டது.
கல்வித் துறையிலும், சமூகச் சேவைத் துறையிலும் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருதை அலையன்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியது. இது குறித்து டாக்டர் அச்சுதா சமந்தா கூறியதாவது: சமூகத்தின் முன்னேற்றத்துக்காக கடந்த 33 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.
இந்த கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கோவா மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, நிதி ஆயோக் உறுப்பினரும், ஜேஎன்யு பல்கலைக்கழக வேந்தருமான பத்ம பூஷண் டாக்டர் விஜய்குமார் சரஸ்வத், கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, கர்நாடக மேலவைத் தலைவர் பசவராஜ் ஹோரட்டி, இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications