பெங்களூருவில் வெடித்தது 'பைப்' வெடிகுண்டு இல்லை: போலீஸ் தகவல்
பெங்களூரு: பெங்களூருவில் வெடித்தது முதலில் 'பைப்' வெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது பைப் வெடிகுண்டு இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பெங்களூர் சர்ச் சாலையில் நேற்று இரவு குண்டு வெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.

இதில் முதல் கட்டமாக வெடிகுண்டை வெடிக்கச் செய்ய அலுமினியம் பைப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. வெடி ருமருந்து நிரம்பிய அலுமினிய பைப்பில் இரும்புத் துகள்கள், பேட்டரி இணைக்கப்பட்ட டைம் பாம் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் பைப் பாம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தற்போது அம்மோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், பேட்டரி இணைக்கப்பட்ட டைம் பாம், துணி, நாளிதழ் ஆகியவை அடங்கிய வெடிகுண்டே இந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதை பெங்களூர் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு தெலுங்கு நாளிதழ் ஒன்றில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இந்த பைப் பாம் வெடித்ததில் 9 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications