திருப்பதி பெருமாள் பக்தர்களுக்கு தித்திப்பு தகவல்.. திருமலையில் திருநாமம் ரூ.10? லட்டு நியூஸ் பாருங்க
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், அடிக்கடி மகிழ்ச்சியை வெளியிட்டு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய தகவல் வெளியாகி, பெருமாள் பக்தர்களுக்கு குஷியை தந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த லட்டு ஏழுமலையான் கோயிலிலேயே 3 வகைகளில் தயார் செய்யப்படுகிறது.

முதல் லட்டு, 175 கிராம் எடையில் பக்தர்களுக்கு கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும்.. 2வது லட்டு 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும்.. இதுதான் பெரிய லட்டு ஆகும். 3வது லட்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காகவே தயார் செய்யப்படுகிறது.
பக்தர்கள்: இதில், 175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகிய பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான நெய் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது. அந்தவகையில், சென்னையிலும் திருப்பதி லட்டு இனி கிடைக்க போகிறது.
குட்நியூஸ்: இதுகுறித்து நேற்றைய தினம், திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "லட்டு பிரசாதம் பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், பெங்களூர் தகவல் மையங்களில் மட்டுமே கிடைத்து வந்த லட்டு பிரசாதம் இனி ஆந்திர மாநிலம் ரம்ப சோவரம், ஒண்டிமிட்டா, பித்தாபுரம், விசாகப்பட்டினம் , விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்னொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.. அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமத்துடன் கோவிலுக்கு சென்றே தரிசனம் செய்வது வழக்கமாகும். இதை சாக்காக வைத்து, கோவில் வளாகத்திலேயே திருநாமம் இட பக்தர்களிடம் ரூ.10 முதல் 20 வரை வசூல் செய்து ஒரு சில பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு பணத்தை பிடுங்குகிறார்கள். இதுகுறித்த புகார்கள் தேவஸ்தானத்துக்கு செல்லவும், இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.
தொண்டர்கள்: அதன்படி, ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்... திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தொடங்கி வைத்துள்ளார்.
ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசன வரிசைகளுக்கு செல்லும் முன்பு திருநாமம் வைக்கும் திட்டம் நடைமுறையில் ஏற்கனவே இருந்து வந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக திருநாமம் வைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது... இந்த நேரத்தில்தான், பலரும் கோயில் வாசலில் திருநாமம் போடுவதற்கு 10 ரூபாய் வசூலித்துள்ளனர்.
திருநாமம்: தற்போது தேவஸ்தானம் இலவசமாக திருநாமம் போடும் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதையடுத்து, ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நெற்றியில் திருநாமம் செலுத்தி வருகின்றனர்.. இனிமேல் ரூ.10 கட்டணம் செலுத்தி திருநாமமிட வேண்டியதில்லை என்பதால், பக்தர்களுக்கு இந்த ஏற்பாடு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications