குக்கர் ஆர்டர் செய்துவிட்டு, ஐபோன்களை பார்சல் செய்து ஆட்டய போட்ட அமேசான் ஊழியர்
மும்பை: அமேசான் நிறுவன ஆன்லைனில், தனது பெயரில் சமையல் குக்கர் ஆர்டர் செய்துவிட்டு, பார்சல் செய்யும் நேரத்தில், விலையுயர்ந்த பொருட்களை மாற்றி வைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய அந்த நிறுவனத்தின் பலே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் வணிகத்தில் முன்னணியிலுள்ளன. சில நேரங்களில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் பொருளை தவிர்த்து வேறு பொருள், பார்சலில் செல்வதும் உண்டு.

ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் சென்றது இதற்கு ஒரு உதாரணம். இதுபோன்ற கோல்மால்களுக்கு ஆன்லைன் நிறுவன ஊழியர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம் இப்போது அம்பலமாகியுள்ளது.
மும்பை பிவான்டியிலுள்ள, அமேசான் நிறுவனத்தின் குடோனில் வேலை பார்ப்பவர் 21 வயது, பிரமோத் பம்லே. சமீபத்தில் திருட்டு பொருள் விற்பனை வழக்கில் இவரை மும்பை, விதல்வாடி போலீசார் கைது செய்தனர். குறைந்தவிலைக்கு அவர் பொருள் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டபோது, ரூ.8 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள ஐபேட், ஐபோன், விலையுயர்ந்த வாட்சுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரமோத், அமேசான் நிறுவன பார்சல் டிபார்ட்மென்டில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பல்வேறு 'யூசர்நேம்'களில் அமேசான் வெப்சைட்டில் சமையல் குக்கர்களை ஆர்டர் செய்யும், பிரமோத், பார்சல் பகுதிக்கு வரும்போது, குக்கர்களுக்கு பதிலாக, விலையுயர்ந்த பொருட்களை வைத்து அனுப்புவாராம். பிறகு அந்த பொருட்களை டெலிவரி பெற்றுக்கொண்டு, வெளியாட்களிடம் குறைந்த விலையில் விற்பாராம்.
இவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 420 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications