'மே டே, மே டே' என அலறிய முகேஷ் அம்பானி விமானிகள்: மும்பையில் பரபரப்பு
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் இருந்து அபாய தகவல் வந்ததால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் 2 மணிநேரம் பதட்டம் நீடித்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 2007ம் ஆண்டு தனது மனைவி நீத்தாவின் 44வது பிறந்தநாள் அன்று அவருக்கு ரூ. 242 கோடி மதிப்புள்ள ஏர்பஸ் 319 விமானத்தை பரிசாக அளித்தார். அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தனியார் விமானங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அம்பானி விமானம் டெல்லி, லாகூர் வழியாக மஸ்கட் செல்வதாகவும் அதில் தீப்பிடித்துவிட்டதாகவும் மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனர். மீண்டும் 6 நிமிடங்கள் கழித்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானிகள் அம்பானி விமானம் தீப்பிடித்து கடலில் விழப் போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் டெல்லி, கராச்சி, மஸ்கட் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விமானம் ஏதாவது தீப்பிடித்து கடலில் விழப் போகிறதா என்று கேட்க அவர்கள் அப்படி எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து மும்பை அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்த சிக்னலை வைத்து பார்த்தபோது தான் அது மும்பை விமான நிலையத்தில் இருந்து வருவது தெரிந்தது.
உடனே மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அங்கு அம்பானியின் விமானம் நிற்கிறதா என்று கேட்டனர். அவர்களும் தனியார் விமானங்கள் நிற்கும் இடத்திற்கு சென்று பார்த்தால் அம்பானி விமானம் அங்கு நின்று கொண்டிருந்தது. விமானி அறையில் 2 விமானிகள் இருந்தனர்.
விமான நிலையத்தில் நின்று கொண்டே ஏன் அபாய எச்சரிக்கை அளித்தீர்கள் என்று கேட்டதற்கு விமானிகள் கூறுகையில், அவசர நேரத்தில் பயணிகளை சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றுவார்களா என்பதை கண்டறிய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை பரிசோதனை நடத்த இருந்தது. அதற்கு முன்னோட்டம் பார்த்தோம் என்றனர்.
இந்த சம்பவம் பற்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications