கொடுமை.. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆம்புலன்சை ஜெ. பாதுகாப்புக்காக நிறுத்திய பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: சிறையில் இருந்து வி.வி.ஐ.பி மரியாதையுடன் ஜெயலலிதா பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஜெயலலிதா காரின் முன்னுக்கும் பின்னுக்கும், பல வாகனங்களில் பாதுகாப்பு வீரர்கள் இருந்த நிலையில் மிதமான வேகத்தில் ஜெயலலிதா கார் சென்றது. சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்கள் தன்னை பார்க்கவும், பூக்களை வீசவும் வசதியாக ஜெயலலிதா கார் மித வேகத்தில் பயணப்பட்டது. ஜீரோ டிராபிக், அதாவது, அனைத்து சிக்னல்களிலும் சிவப்பு சிக்னல்களை எரியவிட்டு ஜெயலலிதா பாதையில் மட்டும் பச்சை சிக்னல்கள் எரியவிடப்பட்டிருந்தன.

இதனால் அனைத்து சிக்னல்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. பொம்மனஹள்ளி, மடிவாளா, கோரமங்களா அவுட்டர் ரிங் ரோடு, இந்திராநகர் வழியாக கார், விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்தது.
3.40 மணியளவில் கார் மடிவாளா சிக்னலுக்கு வந்தபோது, நோயாளியுடன் மருத்துவமனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் சிக்னலில் மாட்டிக்கொண்டது. அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும், நோயாளியின் உறவினர்களும், ஆம்புலன்ஸ்சை மட்டுமாவது விடுங்கள் என டிராபிக் போலீசாரிடம் கெஞ்சினர்.
ஆனால் போலீசாரோ, ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது கட்டாயம். மேலதிகாரிகள் எங்களை திட்டுவார்கள். எனவே கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள் என்றனர். இதனால் கோபமடைந்த நோயாளியின் உறவினர்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்து ஜெயிலில் இருந்த ஒருவருக்காக நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்று கோபத்தில் டிராபிக் போலீசாரிடம் சண்டை போட்டனர். ஆனால் போலீசார் காதில் போட்டுக்கொள்ளாமல் கடமையே கண்ணாக இருந்தனர்.
ஜெயலலிதா கார் சென்ற பிறகு, ஐந்து நிமிடத்துக்கும் மேல் காத்திருந்த ஆம்புலன்ஸை கிளம்பி செல்ல வழிவிட்டனர் டிராபிக் போலீசார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications