அமெரிக்க மையம் மீதான தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை குறைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: அமெரிக்க மைய தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு செய்து தீர்ப்பளித்துள்ளது.
கொல்கத்தாவில் கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்க கலாசார மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நான்கு போலீசார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இது என விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த விாசரணையில், 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் அப்டாப் அகமது அன்சாரி மற்றும் ஜமாலுதின் நாசர் ஆகிய இரு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிற ஐவருக்கும், குற்றத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.கே.பட்னாயக் முன்னிலையில் நடந்தது. இன்று நீதிபதி தனது தீர்ப்பில் குற்றவாளிகள் இருவருக்குமான தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டார். இதன்படி அப்டாப் அகமது அன்சாரி சாகும்வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும், மற்றொரு குற்றவாளி ஜமாலுதின் நாசர் 30 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். மேல் முறையீடுக்கு வாய்ப்பு கிடையாது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications