ஜானின் உடலை மீட்க சென்ற போலீசார்.. அம்பு எய்தி ஓட விட்ட சென்டினல் ஆதிவாசிகள்.. திக் திக் நிமிடம்!
அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை மீட்க சென்ற அதிகாரிகள் சென்டினேலீஸ் மக்களால் துரத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை மீட்க சென்ற அதிகாரிகள் சென்டினேலீஸ் மக்களால் துரத்தப்பட்டுள்ளனர்.
அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும். இங்கு உள்ள சென்டினேலீஸ் மக்களுக்கு வெளியுலக மனிதர்களை பிடிக்காது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்த தீவிற்கு சென்ற போது ஜான் ஆலன் என்று அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார்.
ஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் தேதி அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்டினேலீஸ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டு துன்புறுத்தி கொலை செய்யப்பட்டார்.
[சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி ]

மீட்க
இந்த நிலையில் கொல்லப்பட்ட ஜானின் உடல் இன்னும் அந்த தீவில்தான் உள்ளது. அந்த தீவின் கடற்கரையில் உடல் புதைக்கப்பட்டு இருக்கிறது. இவரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும் என்பதால், போலீசார் அந்த உடலை மீட்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

படை சென்றது
அவரது உடலை மீட்பதற்காக நேற்று மாலை போலீஸ் படை ஒன்று அந்த தீவிற்கு சென்றுள்ளது. 2 மீனவர்கள், 4 போலீசார் என்று 6 பேர் கொண்ட படை அந்த தீவிற்கு சென்றுள்ளது. இவர்கள் கையில் ஆயுதம் ஏந்தி இருந்தாலும் அதை மறைத்தபடி ஆதிவாசிகளை அணுகி இருக்கிறார்கள்.

கோபமாக பார்த்தனர்
ஆதிவாசிகளுக்கு 300 மீட்டர் தூரத்தில் இருக்கும் போது படகுகளை நிறுத்திவிட்டு, அந்த தீவின் கரையை நோட்டமிட்டுள்ளனர். அப்போது, சென்டினேலீஸ் ஆதிவாசிகள், உள்ளே இருந்து வெளியே வந்த ஜானின் சமாதி அருகே நின்றுள்ளனர். ஜானின் சமாதி அருகிலேயே நின்று, போலீசாரை கோபமாக பார்த்ததாக கூறப்படுகிறது.

அம்பு எய்தினார்கள்
போலீஸ் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் சென்டினேலீஸ் மக்கள் போலீசாரை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். அதோடு போலீசாரை நோக்கி அம்புகளை எய்தி இருக்கிறார்கள். ஆனால் தூரத்தில் இருந்த காரணத்தால் இதில் எந்த போலீசாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மீண்டும் ஓடி வந்தனர்
இதையடுத்து போலீசார் அங்கிருந்து மீண்டும் வெளியே தப்பித்து வந்தனர். சென்டினேலீஸ் மக்கள் மிகவும் கோபத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு இருக்கும் ஜானின் உடலை இதனால் இரவில் மீட்கலாமா என்று யோசித்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications