ராகுலுக்கு அமேதி இருப்பிட சான்று தர ஆட்சியர் மறுப்பு- காங். அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

அமேதி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி. இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் அவர் தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும்.

ஆனால் அவருக்கு அமேதியில் வங்கி கணக்கு எதுவும் இல்லை. இதையடுத்து புதிதாக வங்கி கணக்கு தொடங்க திட்டமிட்டார்.

Amethi officials reject Rahul Gandhi's residence proof application

வங்கி கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பதற்கான சான்று அளிக்க வேண்டும்.இதையடுத்து ராகுல்காந்தி இருப்பிட சான்று கேட்டு அமேதி ஆட்சியருக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தார்.

ஆனால் அவருக்கு இருப்பிட சான்று அளிக்க ஆட்சியர் மறுத்து விட்டார். ராகுல்காந்திக்கு அமேதியில் எந்த குடியிருப்பும் இல்லை. அவர் அமேதியில் வசிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எதிர்பாராதவிதமாக கூட அவர் அமேதியில் தங்கி இருக்கவில்லை. எனவே அவருக்கு இருப்பிட சான்று வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விட்டார்.

ராகுல்காந்தியின் விண்ணப்பம் தள்ளுபடியானது காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+