ஜோஷிமத்தை போல மூழ்க தொடங்கும் மற்றொரு இடம்? பீதியில் உறைந்த மக்கள்.. என்னதான் நடக்குது?

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஜோஷிமத்தை போல மற்றொரு பகுதி மூழ்க தொடங்கியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் நகரம் ஜோஷிமத். மலைப்பகுதியில் அமைந்து இருக்கும் இந்த ஊர் ரிசிகேஷ் - பத்ரிநாத் ஹைவேயில் உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,150-அடி உயரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. சுற்றுலாப்பகுதியாகவும் இந்த நகரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மூழ்கும் ஜோஷிமத் நகரம்

மூழ்கும் ஜோஷிமத் நகரம்

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமான ஜோஷிமத் தற்போது மூழ்கத்தொடங்கியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் இங்கு 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் விழுந்து உடையும் அபாயத்தில் உள்ளன. சாலைகளும் இரண்டு துண்டுகளாக பல இடங்களில் உடைந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் இந்த பகுதி அதிகமான எடையை தாங்கும் திறன் கொண்டது அல்ல என்றும் அதன் காரணமாகவே தற்போது இந்த நகரம் மூழ்கத்தொடங்கியிருப்பதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.

விபரீத நிலைக்கு காரணம் என்ன?

விபரீத நிலைக்கு காரணம் என்ன?

இதற்கும் அங்கு சமீப காலமாக மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், நீர் மின் திட்டங்கள் ஆகியவையே உடனடி காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஜோஷிமத் பகுதியில் அதிகமான கட்டுமானங்களுக்கு உகந்த இடம் இல்லை என்றும் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் 1976- ஆம் ஆண்டில் அரசால் அமைக்கப்பட்ட மிஸ்ரா ஆணையம் எச்சரித்து இருந்தது. ஆனாலும் இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டதே தற்போதைய விபரீத நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

சுமார் 80 கி.மீட்டர் தொலைவில்

சுமார் 80 கி.மீட்டர் தொலைவில்

விரிசல் விழுந்த கட்டுமானங்களை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. அபாயமான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த துயரத்திற்கு மத்தியில், ஜோஷிமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஜோஷிமத்தில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் கரன்பிரயாக் என்ற இடத்தில் உள்ள பகுகுனா நகரில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜோஷிமத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும்..

ஜோஷிமத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும்..

இதனால், இந்த நகரமும் விரைவில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக சிதர்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ சவுரப் பகுனா கூறுகையில், ஜோஷிமத் அருகில் இருக்கும் பிற கிராமங்களும் இதேபோன்ற பிரச்சினையை சந்தித்துள்ளன. ஜோஷிமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக முதல்வரிடம் விரைவில் தெரிவிக்கப்படும். ஜோஷிமத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜோஷிமத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளோம்" என்றார்.

50-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்

50-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்

கரனப்ரயாக் பகுதியும் பேரிடர் மண்டல (பிரிவு 5) பகுதியில் தான் உள்ளது. அந்த பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் விழுந்துள்ளன. ஜோஷிமத்தில் சுமார் 678 கட்டிடங்கள் ஆபத்தானவை என அறிவிக்கப்பட்டு இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜோஷிமத்திலும் இதேபோல்தான் முதலில் ஏற்பட்டது. கர்னபிரயாக் பகுதியில் வேறு நீர் மின் திட்டங்க்ள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. எனினும், ரயில்வே திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்று உள்ளூர் மக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

அச்சத்தில் மக்கள்

அச்சத்தில் மக்கள்

கரனப்ரயாக்கில் நகராட்சி பகுதியிலும் ஜோஷிமத் அமைந்துள்ள சமோலி மாவட்ட எல்லைக்குள் தான் வருகிறது. இங்குள்ள வீடுகள் மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது தொடர்பான வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதை தவிர உத்தரகாண்டில் உள்ள பவுரி மாவட்டத்தில் சில பகுதிகளிலும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் தகவல் பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+