மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்..கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் மத்திய அரசு..அமைதி திரும்புமா
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பதற்றம் தணிந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜிரிபம் மாவட்டத்தில் மைத்தேயி இன மக்கள் சிலர் மாயமான நிலையில், அவர்கள் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டதே இதற்கு காரணமானது. இதனால் பாதுகாப்பிற்காக மத்திய அரசு, கூடுதலாக 90 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பைரன் சிங் முதல்வராக இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்குக் கடந்த இரு ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கடந்த மே மாதம் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த மோதலில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் முழுமையாக பதற்றம் தீர்ந்தபாடில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அங்குச் சற்று அமைதி திரும்பியிருந்தது. ஆனால், அங்கு மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது.
ஜிரிபம் மாவட்டத்தில் மைத்தேயி இன மக்கள் சிலர் மாயமான நிலையில், அவர்கள் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டதே மீண்டும் வன்முறை ஏற்பட காரணமாக அமைந்தது. குறிப்பாக மணிப்பூரின் ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு கூடுதல் வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி மணிபூருக்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். இது குறித்து மணிப்பூர் மாநில தலைமை பதுகாப்பு ஆலோசகர் கூறியதாவது:- கூடுதலாக 90 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பிற்கு வர உள்ளனர். இதில் குறிப்பிட்ட அளவு வீரர்கள் இம்பாலுக்கு ஏற்கனவே வருகை தந்துவிட்டனர். பதற்றமான பகுதிகளுக்கு வீரர்கள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இன்னும் சில நாட்களில் அனைத்து பகுதிகளிலும் வீரர்கள் சென்றடைந்து விடுவார்கள். காவல்துறையின் ஆயுத கிடங்கில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் சுமார் 3 ஆயிரம் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்பு படை, ராணுவம், அசாம் ரைபிள்ஸ், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, சஸ்ஹஸ்த்ரா சீம பால் ஆகிய படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். ஏதாவது பிரச்சினை எழுந்தால் அதை ஒருங்கிணைந்து தீர்வு காண்போம்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications