பாஜகவுக்கு செக்.. ராய்ப்பூரில் இன்று கூடுகிறது காங்கிரஸ் மாநாடு.. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்?
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
ராய்பூர்: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுக்கப்பட்ட வேண்டிய வியூகங்கள் குறித்து விவாதிக்க சத்தீஸ்கரின் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு இன்று நடைபெறுகிறது.
கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு சென்றது என காங்கிரஸ் கடந்த 9 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி காந்தி-நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜடோ யாத்திரையை' வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். மேலும் சில முயற்சிகளையும் காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறது. ஆனால் கட்சிக்கு முன்னர் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.

வியூகங்கள்
இமாச்சலப் பிரதேசத்தில் என்னதான் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினாலும் மற்ற இடங்களில் பலவீனமாகதான் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் இந்த பலவீனத்தை களைய வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்க்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. இவர்களை ஒருங்கிணைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆனால் ஒருங்கிணைப்பு சாத்தியமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸின் வாக்குகளை தன்வசப்படுத்திதான் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்புக்கு வந்திருக்கிறது. இதே நிலைமைதான் டெல்லி உள்ளாட்சி தேர்தலிலும். இப்படி இருக்கையில் ஆம் ஆத்மி இந்த பாதையை விட்டுவிட்டு ஏன் மீண்டும் காங்கிரசுடன் ஒன்றிணைய வேண்டும்? என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதேபோலதான் மேற்கு வங்கத்திலும் நடந்திருக்கிறது. எனவே இந்த மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார். எனவே இது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

புதிய யாத்திரை
மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை பரவலாக பேசப்பட்ட நிலையில் அருணாச்சலப் பிரதேசம் முதல் குஜராத் வரை மற்றொரு நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும். அதேபோல நாடாளுமன்ற தேர்தல் தவிர்த்து மேகாலயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலும் கர்நாடகா, சத்தீஸ்கர் என கூடுதலாக 6 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

காரிய கமிட்டி
இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பான சில முக்கிய முடிவுக்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. அதாவது, கட்சியின் காரிய கமிட்டிக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் இளம் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் நியமனம் மூலமாக உறுப்பினர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். எனவே இது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு செக்?
அதுமட்டுமல்ல, இந்த மாநாடு வேறு சில எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இந்த வருடம் 9 மாநில தேர்தலும் நடக்க போகிறது.. இந்த 9 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் சட்டீஸ்கர், ராஜஸ்தானில் கட்சி ஆட்சியில் இருக்கிறது. மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் சில மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.. இதைதவிர, எம்பி தேர்தலில், பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது.. அந்தவகையில், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டணி குறித்தும், இந்த ராய்ப்பூர் மாநாட்டில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.. எப்படி பார்த்தாலும் காங்கிரஸின் இந்த 3 நாள் மாநாட்டினை பாஜகவும் உற்றுகவனிக்க துவங்கிவிட்டது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications