For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மம்தா '3டி' மாடலில் ஆட்சி நடத்துகிறார்.. வெளுத்து வாங்கிய அமித் ஷா!

Google Oneindia Tamil News

கொல்கத்தா; மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தேர்தல் யுத்தம் அனல் பறக்கிறது. இன்று கூச் பெஹாரில் பிரச்சாரத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மம்தா பானர்ஜி, சர்வாதிகாரம், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் திருப்திப்படுத்துதல் ஆகிய 3 டி மாடலில் செயல்பட்டு மாநில அரசை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை இரண்டுகட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3ம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.மொத்தம் 8 கட்டங்களாக அங்கு இந்த மாதம் முடியும் வரை தேர்தல் நடைபெற உள்ளது.

Amit Shah accused Mamata of running state 3T model of Tanashahi, Tolabazi, and Tushtikaran

இந்நிலையில் மேற்கு வங்கமாநிலத்தில் வடக்கு பகுதியில் உள்ள கூச் பெஹாரில் நடந்த பொதுப் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, கடந்த வியாழக்கிழமை நந்திகிராமில் நடந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, மம்தா அங்கிருந்து தேர்தலில் தோல்வியடையப் போகிறார் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.

தீதி (மம்தா) சர்வாதிகாரம், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் திருப்திப்படுத்துதல் ஆகிய 3 டி மாடலில் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்: ஆனால் மோடி ஜி வளர்ச்சி, நம்பிக்கை, வர்த்தகம் ஆகிய 3டி மாடலில் நடத்துகிறார்.

வாரிசு அரசியல்.. திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி.. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சுவாரிசு அரசியல்.. திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி.. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

"நந்திகிராமில் நேற்று நடந்த தேர்தலில் தீதி (மம்தா) தோல்வியடைகிறார் என்று முடிவாகிவிட்டது. வாக்களார்களே வட வங்காள அரசியல் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடிக்கு வாய்ப்பு வழங்குங்கள். நீங்கள் நரேந்திர மோடிக்கு ஒரு முறை வாய்ப்பளித்தால், பாஜக இந்த அரசியல் வன்முறையை வட வங்கத்தில் இருந்து நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும். மேற்கு வங்க மாநிலத்தில் அரசாங்கத்தை அமைத்தால், வளர்ச்சிக்கு பாஜக முன்னுரிமை அளிக்கும். "உங்கள் அபிவிருத்திக்காக வட வங்காள அபிவிருத்தி வாரியத்திற்கு ரூ .2000 கோடியை வழங்குவோம் என்றார்.

English summary
As the political battle in West Bengal intensifies, Union Home Minister Amit Shah on Friday accused Chief Minister Mamata Banerjee of running the state government on a "3T model of Tanashahi, Tolabazi, and Tushtikaran" (dictatorship, extortion, and appeasement).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X