For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே.வங்கம்: பாஜக தலைவர் ஜேபி நட்டா பாதுகாப்பு வாகனம் மீது சரமாரி கற்கள் வீச்சு- அமித்ஷா கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 10 ஆண்டுகளாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸை எப்படியும் வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கான முனைப்பில் பாஜக உள்ளது.

 Amit Shah condemns attack on convoy of BJP national president JP Nadda in WB

இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்க பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 Amit Shah condemns attack on convoy of BJP national president JP Nadda in WB

டைமண்ட் ஹார்பருக்கு இருவரும் சென்று கொண்டிருந்த போது அவர்களது பாதுகாப்பு வாகனம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. பெரிய செங்கல் ஒன்றும் இந்த பாதுகாப்பு வாகனத்தை நோக்கி எறியப்பட்டது. இதில் ஜேபி நட்டாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விஜய் வர்க்கியா காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 Amit Shah condemns attack on convoy of BJP national president JP Nadda in WB

பாஜக தலைவர்கள் மீதான இந்த தாக்குதல் அக்கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மத்திய அமைச்சர்கள் பலரும் ஜேபி நட்டாவை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய திரிணாமுல் காங்கிரசாரின் வன்முறைகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என்றார். அமித்ஷா

 Amit Shah condemns attack on convoy of BJP national president JP Nadda in WB

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்... நேற்றிரவு விவசாயிகளை சந்தித்த அமித்ஷா..! இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்... நேற்றிரவு விவசாயிகளை சந்தித்த அமித்ஷா..!

இது தொடர்பாக பாஜக தொண்டர்களிடையே பேசிய ஜேபி நட்டா, துர்கா தேவியின் ஆசியால்தான் காப்பாற்றப்பட்டு இங்கு வந்திருக்கிறேன். மேற்கு வங்க பாஜக தொண்டர்களின் பாதுகாப்பை நினைக்கவே அச்சமாக உள்ளது என்றார்.

 Amit Shah condemns attack on convoy of BJP national president JP Nadda in WB
 Amit Shah condemns attack on convoy of BJP national president JP Nadda in WB
English summary
Union Home Minister Amit Shah has condemned the attack on convoy of BJP national president JP Nadda at Diamond Harbour in West Bengal today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X