தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
ராய்கஞ்ச்: மேற்கு வங்க மாநில மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் மம்தா பானர்ஜி வைத்திருக்கும் குண்டர்களை தலைகீழாக கட்டி வைத்து அடித்து தோலை உரிப்பேன் என கொந்தளித்து பேசி இருக்கிறார் உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர் ஆன அமித் ஷா.
இந்தியாவில் 18 வது மக்களவைக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது.
2ஆம் கட்ட தேர்தல்: கர்நாடகா, கேரளம், அசாம் ,பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்திலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அமித் ஷா: இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கார்த்திக் பாலுக்கு ஆதரவு கேட்டு நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, மம்தா பானர்ஜி அரசை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். அந்த தொகுதியில் 2019ஆம் ஆண்டு ஏற்கனவே பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி: இந்த நிலையில் அந்த தொகுதியை மீண்டும் பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா,"குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடுவதற்கு காங்கிரஸ்க்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் தைரியமே கிடையாது. ஆனால் இந்த புதிய சட்டத்தின் கீழ் அனைத்து இந்து அகதிகளும் இந்தியர்களாக குடியுரிமை பெற முடியும். எல்லையோர மாநிலமாக இருக்கும் மேற்கு வங்கத்தில் ஊடுருவலை மம்தா பானர்ஜியால் நிறுத்த முடியாது.
ஊழல் ஆட்சி: ஆனால் பிரதமர் நரேந்திர மோடியால் நிறுத்த முடியும். கடந்த தேர்தலில் 18 தொகுதிகளை பாஜகவுக்கு மேற்கு வந்த மக்கள் கொடுத்தனர். இந்த முறை எங்களுக்கு 35 இடங்களை கொடுத்தால் ஊடுருவலை நிறுத்துவோம்.. சந்தேஷ்காலியில் வாக்கு வங்கி அரசியலுக்காக பெண்களை சித்திரவதை செய்ய அனுமதித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. உயர் நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாகவே குற்றவாளிகள் தற்போது பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மம்தா பானர்ஜி ஆட்சியில் தான் ஊடுருவல்காரர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. இதனால் மக்கள் ஊழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோலை உரிப்பேன்: மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் மம்தா பானர்ஜி குண்டர்களை தலைகளாக தொங்கவிட்டு தோலை உரிப்பேன். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்போதுதான் வடக்கு வங்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கும் என நான் உறுதி கூறுகிறேன். ஏற்கனவே ராய்காஞ்சியில் எய்ம்ஸ் அமைக்க திட்டமிட்டோம்.. ஆனால் அதை மம்தா பானர்ஜி தடுத்துவிட்டார். எங்களுக்கு 30 இடங்களை மக்கள் கொடுத்தால் வடக்கு வங்காளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடங்குவோம்" என பேசினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications