மும்பையில் அமித்ஷா! முடிவுக்கு வருமா சிவசேனா- பாஜக கூட்டணி இழுபறி ?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான பாஜக- சிவசேனா கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா தற்போது மும்பையில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.
மகாரஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்டோபர் 15ந் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்வதில் பாரதிய ஜனதா -சிவசேனா இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தலா 135 தொகுதிகள்..
சிவசேனாவும் பாஜகவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட்டு எஞ்சிய 18 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு.

உத்தவ் தாக்கரே திட்டவட்டம்
ஆனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக 135 தொகுதிகளை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது.. நாங்களே அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று கூறிவிட்டார்.

விரிசல்
இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சிவசேனாவுக்கு சாதகம்
இந்த நிலையில் 10 மாநில இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்திருப்பது சிவசேனாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மும்பையில் அமித்ஷா
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், பாஜகவுக்கு இது ஒரு நல்ல பாடம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார்.

இழுபறிக்கு முடிவு?
அவர் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி சிவசேனாவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறிக்கு முடிவு கட்டலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய நிலையில் பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிவசேனாவுக்கு கூடுதல் தொகுதிகளை முன்வரலாம் என்று தெரிகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications