உங்கள் வரலாற்று பிழைகளை மறந்து விடாதீர்கள்.. ராகுல் காந்திக்கு அமித் ஷா பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ராகுல் காந்திக்கு அமித் ஷா பதிலடி- வீடியோ

  டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல் மறந்துவிடக்கூடாது அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

  கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டிய அவர் கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றார்.

  ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருப்பது நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது. இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பாஜகவினர் கொண்டாடுகின்றனர் என்றும் சாடினார்.

  அமித் ஷா பதிலடி

  அமித் ஷா பதிலடி

  ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்காக இந்தியா வருந்தும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

  மறந்துவிடாதீர்கள்

  அவர் கூறியிருப்பதாவது, காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல்காந்தி மறந்துவிடக்கூடாது. எமர்ஜென்சி, அரசியல் சாசன பிரிவு 356 ஐ தவறாக பயன்படுத்துதல், கோர்ட் , மீடியா மற்றும் சிவில் அமைப்புகளை காங்கிரஸ் முடக்கி வைத்தது.

  மக்கள் புத்திசாலிகள்

  கர்நாடக மக்கள் யாரை தேர்ந்தெடுத்துள்ளனர்?
  104 தொகுதிகளை பெற்ற பா.ஜ.க விற்கா அல்லது அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முதல்வரின் 78 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கா? மஜத 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மக்கள் புத்திசாலிகள். உண்மையை புரிந்து கொள்வார்கள்.

  வெட்கக்கேடானது

  மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த போது ஜனநாயகம் கொல்லப்பட்டது. ஆதரவு, கர்நாடக நலனுக்காக அளிக்கப்படவில்லை. வெற்று அரசியல் லாபத்திற்காக அளிக்கப்பட்டது. வெட்கக்கேடானது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Amit shah reacting Rahul gandhi. He said President of the Congress obviously doesn’t remember the glorious history of his party.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற