"முரட்டு சிங்கிள்".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி!
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அமித் ஷா இன்று அறிவித்தார்.
தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிவடைவதற்கு 9 மாதங்கள் முன்பாகவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகரராவ் ஆட்சிக்காலத்தை முடித்துக் கொள்வதாக கூறி அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து, அதை ஆளுநருக்கு பரிந்துரையாக அனுப்பினார்.
இதை ஏற்று சட்ட சபை கடந்த 6ம் தேதி கலைக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கூட்டணி
எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தெலுங்கானாவில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நெருக்கமாக இருந்து வரும் நிலையில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

வேட்பாளர் பட்டியல்
மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், கடந்த 6ம் தேதி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெளியிட்ட பட்டியலில் 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மீதமுள்ள தொகுதிகள் ஒருவேளை பாஜகவிற்கு வழங்கப்படும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பலரும், தேர்தலுக்கு பிறகு கூட்டணி இருக்க வாய்ப்புள்ளது, முன்கூட்டியே கூட்டணி இருக்காது என்றார். இப்படியான, பல்வேறு யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தனித்து போட்டி
ஹைதராபாத்தில் இன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமித்ஷா அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். இம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவான சக்தியாக உருவெடுக்கும் என்றார். இதன் மூலம், தெலுங்கானாவில், மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

செலவு அதிகம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜகவின் திட்டத்திற்கு முதலில் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் இப்போது முன்கூட்டியே ஆட்சியை கலைத்து சட்டசபைக்கு தனியாகவும் லோக்சபாவுக்கு தனியாகவும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம், இந்த சிறிய மாநிலத்திற்கு அதிக பொருட்செலவை ஏற்படுத்திவிட்டார் என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications