புயலை ஏற்படுத்திய வெப்சைட் செய்தி.. ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர அமித்ஷா மகன் முடிவு
தன்னைக் குறித்து தவறாக எழுதியதாக "தி வயர் " என்ற இணையதளத்துக்கு எதிராக அமித் ஷாவின் மகன் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
டெல்லி : தன்னைக் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தவறாக எழுதியதாக "தி வயர் " என்ற இணையதளத்துக்கு எதிராக அமித் ஷாவின் மகன் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். இந்த மான நஷ்ட வழக்கில் நஷ்ட ஈடாக 100 கோடி கேட்டுள்ளார் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திடிரென்று பிரதமர் நரேந்திர மோடி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்று அழைக்கப்பட்ட இந்த அறிவுப்பு மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஒருவருக்கு பலன்
இந்தியா முழுக்க பல மக்கள் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கஷ்டத்துக்கு ஆளாக நேர்ந்தது. இந்த நிலையில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவிலேயே ஒரேயொரு நபர் மட்டும் தான் பயன் அடைந்துள்ளார் என்று மீடியாவில் செய்தி வெளியாகியுள்ளது.

இணையதளத்தில் கட்டுரை
பயன் அடைந்த ஒரே நபர் அமித் ஷாவின் மகனான ஜெய் அமித் மட்டும் தான் என பெரிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தது ' தி வயர் ' என்ற ஆங்கில இணையதளம்.

ஷேர் செய்த ராகுல் காந்தி
தி வயர் இணையதளத்தில் வந்திருந்த இந்தக் கட்டுரையை டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார் காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் அடைந்தது அமித் ஷாவின் குடும்பம் மட்டுமே என்றும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியும் இந்த விஷயத்தில் விசாரணை வேண்டும் என கேட்டது.

தி வயர் மீது வழக்கு போடுவதாக ஜெய் அமித் எச்சரிக்கை
இதையடுத்து இந்த "தி வயர்'' இணைய தளத்தின் மீது அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் வழக்கு தொடுக்க உள்ளார் . தன்னைக் குறித்து தகாத வகையில் இந்த இணையதளம் கருத்து வெளியிட்டுள்ளது. இது உண்மைக்கு மிகவும் புறம்பான தகவல். இதனால் 100 கோடி கேட்டு அந்த இணையதளத்தின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப் போகிறேன்" என்கிறார். மேலும் அந்த லிங்க்கை ஷேர் செய்திருந்த ராகுல் காந்திக்கும் கண்டனம் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications