ஜெ. மகள் என்றதால் கொலை மிரட்டல்கள்.. உயிரைக்காப்பாற்ற ஓடிய அம்ருதா இப்போ எங்கே உள்ளார் தெரியுமா?

தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வந்த அம்ருத்தா பெங்களூரு திரும்பிவிட்டார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வந்த அம்ருத்தா தொடர் கொலை மிரட்டல்களால் பெங்களூரு திரும்பிவிட்டார்.

Recommended Video

    கொலை மிரட்டல் எதிரொலி: ஜெ.-சோபன்பாபு மகள் என கூறிய அம்ருதா தலைமறைவு?- வீடியோ

    பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருத்தா, ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் எனக்கூறி பரபரப்பை கிளப்பினார். சுப்ரீம் கோர்ட்டிலும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த அவர் தன்னை ஜெயலலிதாவின் வாரிசு என நிரூபிக்க ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

    Amrutha returns to Bengaluru from chennai by life threatens

    ஆனால் இதனை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் மனுதாரர் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை வந்த அவர் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியானது.

    ஆனால் அம்ருத்தாவுக்கு தொடர்ந்து வந்த கொலை மிரட்டல்களால் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். சென்னையில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு பெங்களூரு புறப்பட்டுவிட்டார்.

    இதையடுத்து அவர் விரைவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. இதனிடையே அம்ருத்தா கொலை மிரட்டல் விடுத்தது யார் என உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+