உலகிலேயே பெரியது.. வலையில் சிக்கிய ராட்சச திமிங்கலம்.. மீனவர் அடுத்து எடுத்த உருக்கமான முடிவு
விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் விஷாகப்பட்டினத்தில் உலகிலேயே மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மீனவர்க் வலையில் மாட்டியிருக்கிறது. இந்த மீனோடு கரைக்கு வந்து மீனவர் அதன்பின் எடுத்த முடிவு இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
சமீப நாட்களாக இந்தியாவில் மீனவர்கள் வலையில் அதிக மதிப்பு மீன்கள் அகப்படுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கூட நாகையில் மீனவர் ஒருவர் கற்றாழை மீன் ஒன்றை பிடித்தார்.
இந்த மீனின் மருத்துவ குணங்கள் காரணமாக இதை 2.30 லட்சம் ரூபாய்க்கு அவர் ஏலம் விட்டது குறிப்பிடத்தக்கது.

மீன்
இந்த நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் தண்டாடி கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாக ஆழ்கடலில் மீன் பிடித்து இருக்கிறார். அவருடன் 4-5 மீனவர்கள் இருந்துள்ளனர். இவர்களின் வலையில் திடீரென பெரிய மீன் சிக்கி உள்ளது.

என்ன நடந்தது?
அந்த மீன் மொத்த படகையும் அப்படியே தூக்கி செல்லும் அளவிற்கு பிடித்து இழுத்து இருக்கிறது. பின் கஷ்டப்பட்டு அந்த மீனை பிடித்துவிட்டு மீனவர்கள் வேகமாக கரைக்கு வந்துள்ளனர். கரைக்கு வந்து பார்த்த மீனவர்களுக்கு ஷாக்.

ஏன்?
காரணம் அது திமிங்கலம். அந்த திமிங்கலம் உயிருக்கு போராடிய நிலையில் கரையில் தவித்து உள்ளது. இதை முறையாக விற்றால் பல கோடி கிடைக்கும். பல மருந்துகள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும். ஆனால் அந்த மீனவர் உடனே அந்த திமிங்கலத்தை கடலில் விட முடிவு செய்து இருக்கிறார்.

முடிவு
காசை எதிர்பார்க்காமல் அந்த மீனவர் எடுத்த முடிவு பலரையும் கவர்ந்தது. உடனே அதை காக்க கடலில் விட வேண்டும் என்று அந்த மீனவர் கோரிக்கை விடுத்தார். உடனே விலங்குகள் நலத்துறை, கடலோர காவல்படைக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.

கடலில் விடப்பட்டது
இதையடுத்து அந்த ராட்சச திமிங்கலம் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. இது உலகிலேயே பெரிய திமிங்கலங்களில் ஒன்று என்று விலங்குகள் நலத்துறை தெரிவித்தது. இதை எடை 2 டன் இருந்ததும், நீளம் 17 அடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications