அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு
இந்த வருடம் அந்தமானில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவாகும்.
நிக்கோபார்: அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அதிகாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை . சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது.
கடல் பகுதியில் இந்த நிலநடுக்க அதிர்ச்சி உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் 77 கிமீ ஆழத்தில் உணரப்பட்டு இருக்கிறது.

இதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை. இதனால் பெரிதாக சேதங்கள் எதுவும் உணரப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. நிக்கோபார் கடல்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்த வருடம் அந்தமானில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவாகும்.
அந்தமான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். ஜப்பான் பசிபிக் கடலில் "ring of fire" எனப்படும் அதிக அளவிலான பூமி தகடு அதிர்வு ஏற்படும் பகுதியில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதற்கு இணையாக அந்தமான் கடல் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications