தவறுதலாக பாக். எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவத்தின் ட்ரோன்! பேச்சுவார்த்தை மூலம் மீட்க முயற்சி
ஸ்ரீநகர்: இந்திய எல்லையில், வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ட்ரோன் (mini UAV) ஒன்று, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. தொழில் நுட்ப கோளாரால் இது நடந்திருப்பதாகவும், ட்ரோனை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லை கண்காணிப்பு பணியில் நவீன தொழில்நுட்பங்கள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஊடுருவல்கள், அத்துமீறல்கள், ஆக்கிரமிப்பு முயற்சி உள்ளிடடவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கின்றன. எனுவே, பாதுகாப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பத்தின் தேவைகள் இன்றியமையாததாக மாறியுள்ளன. குறிப்பாக ட்ரோன்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன.

இப்படி இருக்கையில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ட்ரோன் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை பாகிஸ்தான் ராணுவம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மறுபுறம் இந்திய ராணுவம் தரப்பில், ட்ரோனை திரும்பப் பெரும் முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் இது தொடர்பாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்துடன், ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ) மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை பகுதியில் இதுபோன்ற சலசலப்புகள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த புதன்கிழமை இதேபோன்ற பஞ்சாயத்து ஒன்று வெடித்தது. அதாவது இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குண்டு ஒன்று பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் விழுந்தது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால், குண்டு விழுந்த இடம் வெட்ட வெளி என்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது சம்பவம் நடந்திருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications