குடித்துவிட்டு நடுரோட்டில் "டண்டணக்கா" ஆட்டம்.. இன்ஸ்பெக்டரால் பரபரப்பு!
டெல்லி குருகிராமில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் குடித்துவிட்டு நடுரோட்டில் நண்பர்களுடன் ஆட்டம்போட்டுள்ளார்.
Recommended Video

குருகிராம்: டெல்லியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மது குடித்துவிட்டு நடுரோட்டில் ஆட்டம்போட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
தென்மேற்கு டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள சீத்லா மாதா ரோட்டில் நேற்று குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்திவிட்டு அதில் சத்தமாக சினிமா பாடல்களை ஒலிக்க விட்டுள்ளார். பின்னர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். இதனால், அரை மணி நேரத்துக்கும் மேல் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த சில தாபா உணவக உரிமையாளர்கள் வாகனங்களுக்கு வழி விட்டு சாலையைவிட்டு ஓரமாக செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த இளைஞர் நான் யார் தெரியுமா? போலீஸ் இன்ஸ்பெக்டர்.. நான் ரோட்டில் டான்ஸ் ஆடுவேன் என்று கூறி அவர்களை திட்டியுள்ளார். அப்போது அவர் டி சர்ட் அணிந்திருந்தார்.
அந்த இளைஞர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதால் அங்கிருந்தவர்கள் எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து அந்த இளைஞரை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர், ரோந்து போலீஸாரிடமு தவறாக நடந்துகொடுள்ளார். விஷயம் எல்லை மீறுவதை அறிந்த போலீஸார், அந்த இளைஞரையும் அவரது நண்பர்களையும் தூக்கி ஜீப்பில் உட்கார வைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் போலீஸார் விசாரித்ததில், அந்த இளைஞரின் பெயர் தருண் தஹியா என்பதும் அவர் குருகிராமிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள நுஹ் மாவட்டத்தில் தாரு குற்றப்பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் குடும்பத்துடன் குருகிராம் பகுதியில் வசித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோந்து பணியில் சென்ற உதவி காவல் ஆய்வாளர், சகேந்தர் குமார் கூறுகையில், அந்த பகுதியில் வாகனங்கள் நெரிசல் அதிகமானதால் அங்கு சென்று பார்தோம். அங்கே தருண் தஹியா நடுரோட்டில் நள்ளிரவு 1.20 மணிக்கு குடித்துவிட்டு நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் சென்று கேட்டபோது, தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
ஆனாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம் என்று கூறினார்.
இது குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்ட பின்னர், தருண் தஹியாவையும் அவரது நண்பர்களையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications