அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கின்றனர்.
அகமதாபாத்: குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்காரணமாக பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருக்கிறது. போனில் தொடர்பு கொண்டு அகமதாபாத் தலைமை காவல் நிலையத்தில் சில மர்ம நபர்கள் இந்த தகவலை தெரிவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து தற்போது அங்கு போலீசாரும், வெடிகுண்டை செயலை இழக்க வைக்கும் நிபுணர்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தேடுதல் வேட்டையில் பல மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் இந்த மிரட்டல் பொய்யானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications