"ஜஸ்ட் மிஸ்" ஆன தமிழகத்தின் நித்யஸ்ரீ... சோனியின் ”ஜூனியர் சிங்கர்” ஆனார் ஒடிசாவின் அனன்யா!
மும்பை: ஒடிசாவைச் சேர்ந்த அனன்யா நந்தா என்ற சிறுமி சோனியின் இந்த வருடத்திற்கான இரண்டாவது சீசன் குரலிசைப் போட்டியான "இந்தியன் ஐடியல் ஜூனியர்" போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
14 வயதான இந்தச் சிறுமி நகீத் அப்ரான் மற்றும் தமிழகத்தின் நித்யஸ்ரீ வெங்கட்ரமணனை பின்னுக்குத் தள்ளி கோப்பையையும், 10 லட்ச ரூபாய் பரிசுப் பணத்தையும் வென்றுள்ளார்.

ஸ்ரேயா கோஷலும், அர்ஜீத் சிங்கும்தான் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும், முன்னாள் இசையமைப்பாளர் ஆனந்தாஜீதான் அவருடைய லக்கி சார்மாம்.
பிரமாண்ட இறுதிச் சுற்று:
சோனி டிவியின் மிகப் பிரம்மாண்டமான இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. சோனாக்ஷி சின்ஹா, விஷால் டட்லானி, சலீம் மெர்ச்சண்ட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தமிழகத்தின் செல்லக் குரல்:
இந்த பைனலில் அனன்யா, நகீத், நித்யஸ்ரீ ஆகியோர் இறுதிச் சுற்று வரை வந்து பங்கேற்றனர். இதில் நித்யஸ்ரீ தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி. தொடக்கம் முதலே அசத்தலாக பாடி வந்தார்.
முதல் தமிழ்க் குரல்:
இந்தப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட முதல் தமிழகச் சிறுமி நித்யஸ்ரீதான். முற்றிலும் இந்திப் பாடல்கள் மட்டுமே இதில் இடம் பெற்றன. நித்யஸ்ரீயும் இந்திப் பாடல்களை அவ்வளவு அருமையாக பாடினார்.
சத்ருகன் சின்ஹா:
இறுதிப் போட்டியின்போது, பிரபல அரசியல்வாதியும், முன்னாள் நடிகரும், சோனாக்ஷியின் தந்தையுமான சத்ருகன் சின்ஹாவும் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
பரிசை வென்ற அனன்யா:
13 குழந்தைகளுடன் தொடங்கி நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசியாக பைனைலில் அனன்யா இந்த டிராபியினை தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications