30,000 பூத்துகளுக்கு ஆளே இல்லாத ஆந்திரா பாஜக!அமித்ஷா, ஜேபி நட்டா அடுத்தடுத்து விசிட்- டீ யாருக்காம்?
விசாகப்பட்டினம்: மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எப்படியாவது சிங்கிள் டிஜிட் இடங்களை கைப்பற்றும் முனைப்புடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து ஆந்திரா வருகை தருகின்றனர்.
தென்னிந்தியாவில் பாஜக காலூன்றுவது பெரும் போராட்டங்களை பல பத்தாண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகவில் மட்டும்தான் பாஜகவால் வேர்பிடிக்க முடிந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் சிங்கிள் டிஜிட் இடங்களுக்கே சிங்கி அடிக்கும் நிலையில்தான் பாஜக உள்ளது.

ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆந்திராவில் பாஜகவுக்கு ஒரு லோக்சபா எம்பி, ஒரு எம்.எல்.ஏ. என யாருமே இல்லை. அந்த அளவுக்கு ஆந்திரா மக்கள் பாஜகவை ஓரம்கட்டி வைத்துள்ளனர். ஆந்திராவைப் பொறுத்தவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் இடையேதான் போட்டி. தெலுங்குதேசம் கட்சியை விட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வலிமையாக இருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலில் கவுரவமான வெற்றியை பெறுவதில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறார். இதனால் தேர்தல் அறிக்கையின் சில வாக்குறுதிகளை இப்போதே அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டார் சந்திரபாபு நாயுடு. அதேநேரத்தில் பாஜகவுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஆனாலும் பாஜக- தெலுங்குதேசம் கூட்டணி என்பது உறுதி செய்யப்படாத பூடகமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் விசாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். திருப்பதி பொதுக் கூட்டத்தில் ஜேபி நட்டா ஜூன் 10-ல் பேசுகிறார். அமித்ஷா, ஜேபி நட்டாவின் இந்த வருகையானது ஆந்திரா எனும் பாலைவனத்தில் நிற்கும் பாஜகவுக்கு சற்றேனும் நீரைப் பாய்ச்சுகிற முயற்சியாகத்தான் இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். ஏனெனில் ஆந்திராவில் சுமார் 45,000 வாக்குப் பதிவுக்கான பூத்துகள் உள்ளன. பாஜகவுக்கோ 15,000 வரைதான் பூத்துகளுக்கான பொறுப்பாளர்கள் உள்ளனர்; சுமார் 30,000 பூத்துகளின் பொறுப்பாளர்கள் பாஜகவில் நியமிக்கப்படக் கூட முடியாத பரிதாப நிலையில் இருப்பதாலேயே அமித்ஷா, நட்டாவின் இந்த விசிட் இம்மியும் பயன்தராது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications