"ரூ.500 நோட்டுகளை உடனே தடை செய்யணும்! ஊழலை ஒழிக்க அதுவே ஒரே வழி.." சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்
அமராவதி: நமது நாட்டில் ஊழலை ஒழிக்கப் பெரிய கரன்சி நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளே போதும் எனக் குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, பெரிய கரன்சிகளை ஒழித்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
கடந்த கடந்த 2016 நவம்பரில் பிரதமர் மோடி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை இப்போது வரை கூட ஒரு தரப்பினர் வரவேற்கும் அதேநேரம் மற்றொரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தே வருகிறார்கள்.

ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும்
இதற்கிடையே நமது நாட்டில் ஊழலை ஒழிக்க அனைத்து பெரிய கரன்சி நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டூடேவுக்கு அளித்த பேட்டியில் சந்திரபாபு நாயுடு இந்த கருத்துகளைத் தெரிவித்தார். ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை ஒழிக்க என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும். ரூ.500 நோட்டுகள் கூட தொடரக்கூடாது.. அனைத்து பெரிய கரன்சி நோட்டுகளையும் ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும்" என்று சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாகக் கூறினார்.
சந்திரபாபு நாயுடு
தொடர்ந்து மக்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக அரசு வழங்கும் அணுகுமுறை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆந்திர முதல்வர், "என்னைப் பொறுத்தவரை அதை இலவசம் எனச் சொல்வதே சரியானது இல்லை.. முன்பு அரசு அதிக நலத்திட்டங்கள் வழங்காது. என்.டி. ராமராவ் காலத்தில் தான் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அப்படித்தான் நலத்திட்டங்கள் தொடங்கின. இப்போது செல்வம் உருவாக்கப்படுகிறது.
அதேநேரம் வசதி படைத்தவர்களுக்கும், வசதி இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. நலத்திட்டங்கள் அர்த்தமுள்ளதாகவும், சரியான நபர்களுக்குச் சென்று சேர்வதும் உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு
சாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நாடு முழுக்க சாதி வாரிக் கணக்கெடுப்பு, திறன் கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு என மூன்றையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். டேட்டா மிகவும் சக்தி வாய்ந்தது. அதை வைத்துப் பல நலத்திட்டங்களை உருவாக்க முடியும்" என்றார்.
அமராவதி திட்டம்
ஆந்திரா, தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டது. இதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டி இருந்தது. சந்திரபாபு நாயுடு இதற்காக அமராவதி நகரம் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். இருப்பினும், அதன் பிறகு வந்த ஜெகன் அரசு அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இந்தச் சூழலில் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்தாண்டு ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடு, அமராவதி கட்டமைப்பதில் மீண்டும் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்கள் எப்போதும் வித்தியாசமாகச் சிந்திப்பார்கள். நான் ஹைதராபாத் திட்டத்தைத் தொடங்கியபோது, நான் ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கிறேன் என்று விமர்சனம் செய்தனர். சில மாதங்களுக்குள் நான் ஹைதராபாத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். ஹைதராபாத்திற்குச் சர்வதேச நிறுவனங்களை அழைத்தேன்.
நான் இப்போது சொல்கிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. ஹைதராபாத் மற்றும் அமராவதி ஆகியவை நாட்டில் முதல் மற்றும் இரண்டாவது நகரங்களாக இருக்கும் அது மட்டுமல்லாமல், வரும் காலத்தில் அவை சர்வதேச நகரங்களாகவும் இருக்கும், உருவெடுக்கும்" என்றார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications